twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இங்க அவ்வளவு பேரு செத்துட்டு இருக்கான்.. ஜோக்காம்ல! சர்ச்சை இயக்குனரை விளாசித்தள்ளிய நெட்டிசன்ஸ்!

    By
    |

    ஐதராபாத்: கொரோனா வைரஸை வைத்து கிண்டலாக கருத்துப் பதிவிட்ட பிரபல சர்ச்சை இயக்குனரை நெட்டிசன்ஸ் விளாசித் தள்ளினர்.

    Recommended Video

    வைரஸ் உங்கள் நண்பன் | V-CONNECT | FILMIBEAT TAMIL

    பிரபல இந்திப் பட இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஏராளமான தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.

    இவர் இயக்கியுள்ள பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் ரத்த சரித்திரா என்ற இந்தி படத்தை எடுத்தார். இந்த படம் தமிழிலும் வெளியானது.

    இது எப்படின்னு தெரியலையே.. சமூக வலைத்தளங்களில் லீக் ஆன தனுஷ் பட ஹீரோயின் லுக்.. படக்குழு ஷாக்!இது எப்படின்னு தெரியலையே.. சமூக வலைத்தளங்களில் லீக் ஆன தனுஷ் பட ஹீரோயின் லுக்.. படக்குழு ஷாக்!

    பாலியல் வன்கொடுமை

    உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படமாக்கி வரும் இவர் அடுத்து, திஷா பாலியல் வன்கொடுமை விவகாரத்தை படமாக்க இருக்கிறார். இதுபற்றி அவர் 'எனது அடுத்த படம், 'திஷா'. கொடூரமான திஷா பாலியல் வன்கொடுமை பற்றியது. நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நடந்த கொடூரமான கொலை இது. அதன் பின்னணி பற்றி எனது படம் விரிவாக பேசும்' என்று தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் ஃபூல்

    அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் வர்மா, அதற்காக ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார். இப்போது கொரோனா வைரஸ் குறித்து தனது டிவிட்டரில், தெரிவித்திருந்த கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது. 'எனக்கு கொரோனா தொற்று இருப்பதாக எனது டாக்டர் தெரிவித்தார் என்று அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து சிலர், இது ஏப்ரல் ஃபூல் வேலை என்று தெரிந்துகொண்டனர்.

    என் தவறு இல்லை

    என் தவறு இல்லை

    'கவலைப்படாதீங்க சார்... நீங்க கொரோனாவை விட ரொம்ப டேஞ்சரான ஆள், அதனால அது உங்களை ஒன்னும் பண்ணாது' என்று சிலர் கலாய்த்திருந்தனர். இன்னும் சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் அடுத்த ட்வீட்டில், 'மன்னிக்கவும், என்னை ஏப்ரல் ஃபூல் பண்ணுவதற்காக என் டாக்டர் அப்படி சொல்லியிருக்கிறார். இது அவர் தவறு, என் மீது தவறில்லை' என கூறியிருந்தார்.

    ஜோக் விஷயமில்ல

    ஜோக் விஷயமில்ல

    இதற்கும் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இந்த சிரீயசான விஷயத்தில் இப்படியா பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது? என்று சரமாரியாகக் கேட்டிருந்தனர். கொரோனா தொற்று, ஜோக்கடிக்கிற விஷயமில்ல. மக்கள் இங்கே இறந்து கொண்டிருக் கிறார்கள். உங்கள் ஜோக் நிஜமாகிவிடக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பிரபலம்

    மற்றொருவர், 'இவர் மீது தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். பிரபலமாக இருந்துகொண்டு, இதுபோன்ற செயல்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா செய்திருக்கக் கூடாது. இவர் மக்களை பீதிக்கு உள்ளாக்குகிறார்' என்று சிலர் கோபமாகக் கூறி இருந்தனர். இதையடுத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா, அவசரமாக மற்றொரு ட்வீட் பதிவிட்டார்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    அதில், 'இந்த இறுக்கமான சூழ்நிலையை கொஞ்சம் லேசாக மாற்றுவதற்காகத்தான் இப்படி ஜோக் பதிவிட்டேன். இதன் மூலம் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் மீம்ஸ்களை கிரியேட் பண்ணி, அவரை கடுமையாகக் கலாய்த்துள்ளனர்.

    English summary
    Director Ram Gopal Varma lied about having Coronavirus as an April Fools' day prank, Netizens blast Him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X