ஷோலே ரீமேக்: ராம்கோபால் வர்மாவுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
டெல்லி: காப்பிரைட் உரிமையை மீறி ஷோலே படத்தை ரீமேக் செய்ததாக பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமிதாப், தர்மேந்திரா, ஹேமமாலினி நடிப்பில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட படம் ஷோலே.
இப்படத்தை கடந்த 2007ம் ஆண்டு ஆக் என்ற பெயரில் ரீமேக் செய்தார் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா. மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமான ஷோலே படத்தை மீண்டும் எடுக்க முயற்சித்து அதில் மாபெரும் தோல்வி கண்டார் அவர்.

மாபெரும் தோல்வி...
அமிதாப் பச்சன், மோகன்லால், அஜய் தேவ்கன், பிரஷாந்த் ராஜ் சச்தேவ் மற்றும் சுஷ்மிதாசென் போன்ற மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

மோசமான திரைப்படம்...
உலகம் முழுவதும் வெளியாகிய இந்தத் திரைப்படம் 11 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் பாலிவுட்டின் மோசமான திரைப்படங்கள் பட்டியலில் இப்படம் இடம் பிடித்தது.

வழக்கு...
இந்த நிலையில், ஷோலே திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பியின் மகன் சச்சா சிப்பி, பேரன் விஜய் சிப்பி ஆகியோர் டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், ஷோலே படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு உரிமையை ராம்கோபால் வர்மா பெறவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

அபராதம்...
அந்த மனுவை விசாரித்த நீதிபதி மன்மோகன் சிங், இயக்குநர் ராம்கோபால் வர்மாவிற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதி அளித்த தீர்ப்பின்போது வேண்டும் என்றே காப்பிரைட் உரிமை தன்னிடம் இல்லை என்று இருந்தும் கூட உள்நோக்கத்தோடு இந்தப் படத்தை எடுத்துள்ளார் ராம் கோபால் வர்மா.

கப்பார் சிங்...
இதன் மூலம் இயக்குநர் ரமேஷ் சிப்பியிடம் உள்ள காப்பிரைட் உரிமையை அவர் மீறியுள்ளார். ஒரிஜினல் ஷோலே படத்தில் உள்ள கப்பார் சிங் அல்லது கப்பார் உள்பட எந்த கேரக்டரையும் வர்மா உள்பட யாருமே அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











