Poonam Pandey: பூனம் பாண்டே நடத்திய மரண டிராமா.. ராம் கோபால் வர்மா என்ன சொன்னாரு தெரியுமா?

மும்பை: உயிருடன் இருக்கும் நடிகர்கள் திடீரென இறந்து விட்டதாக சில மரண வதந்திகள் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. குத்து, பொல்லாதவன் படங்களில் நடித்த ரம்யா இறந்து விட்டதாகவும் மீடியாக்களில் செய்தி வெளியாக தான் நலமாக இருக்கிறேன் என்றும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்றும் துடித்துப் போய் உண்மையை சொன்னார். ஆனால், தான் இறந்து விட்டதாக நாடகம் ஆடி கர்ப்பவாய் புற்றுநோய்க்காக விழிப்புணர்வு நடத்தவே இவ்வாறு செய்தேன் என தற்போது வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கிய உள்ளார் பூனம் பாண்டே.

32 வயதில் ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகை பூனம் பாண்டே இறந்து விட்டாரா என நாடு முழுவதும் ரசிகர்கள் மட்டுமின்றி அவருடன் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பல பிரபலங்கள், முன்னணி நடிகைகள் என பலரும் அதிர்ச்சியடைந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆனால், கடைசி வரை பூனம் பாண்டே உயிரிழந்த நிலையில், எந்தவொரு புகைப்படமும் அவரது இறுதிச்சடங்கு தொடர்பான வீடியோவும் வெளியாகாத நிலையில், KRK உள்ளிட்ட சில பிரபலங்கள் 3 நாள் முன்னாடி கூட பார்ட்டியில் இருந்தார். அவர் சாக வாய்ப்பே இல்லை எல்லாமே சீப்பான பப்ளிசிட்டி என விளாசி இருந்தார்.

Ram Gopal Varma praised Poonam Pandey for her bold attempt for cervical cancer awareness


2011 உலககோப்பைக்கு பிறகு: கடந்த 2011ம் ஆண்டு சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத விரக்தியில் இருந்த நடிகை பூனம் பாண்டே சென்சேஷனலாக மாற வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக கிரிக்கெட் மைதானத்தில் ஓடப் போவதாக அறிவித்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் திருப்பினார். அதன் பின்னரும் சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போக ஆபாச பட நடிகையாகவே மாறி முழு நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ஹனிமூனில் கணவர் மீது புகார்: 7 ஜென்மங்கள் இருவரும் ஒன்றாக இருப்போம் என காதல் கணவர் சாம் பாம்பேவை திருமணம் செய்துக் கொண்ட பூனம் பாண்டே கோவாவுக்கு ஹனிமூன் சென்ற போதே தனது கணவர் பலாத்காரம் செய்கிறார் என்றும் காட்டுமிராண்டி போல அடித்து துன்புறுத்துகிறார் என புகார் அளிக்க கணவருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

விளாசும் ரசிகர்கள்: கர்ப்பவாய் புற்றுநோய்க்காகத்தான் விழிப்புணர்வு செய்ய இறந்து போல் டிராமா நடத்தினேன் என நடிகை பூனம் பாண்டே தற்போது வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். அவருக்காக உண்மையாகவே கண்ணீர் சிந்திய ரசிகர்களூம், அவரது சினி உலக நண்பர்களும் தற்போது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுக்காக இப்படியொரு கேவலமான ஸ்டன்ட்டை யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் உண்மையாகவே நீ இறந்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள் என திட்டி வருகின்றனர்.

Ram Gopal Varma praised Poonam Pandey for her bold attempt for cervical cancer awareness


ராம் கோபால் வர்மா பாராட்டு: ஆனால், சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா பூனம் பாண்டேவின் இந்த தைரியமான மரண டிராமாவை அறிந்து பாராட்டி உள்ளார். ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும், நீ செஞ்ச காரியத்தால் நாடு முழுவதும் cervical cancer பற்றிய விழிப்புணர்வு நீ நினைத்தது போலவே பற்றிக் கொண்டு டிரெண்டாகி வருகிறது.உன்னுடைய நல்ல இதயத்துக்காகவும் நல்ல எண்ணத்திற்காகவும் பல ஆண்டுகள் வாழ்வாய் என பாராட்டியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X