சொர்க்கத்தில் இருந்து ஜெயலலிதா சந்தோஷப்படுவார்.. கங்கனாவை பாராட்டி தள்ளிய ராம் கோபால் வர்மா!

சென்னை: தலைவி படத்தின் டிரைலரை பார்த்து விட்டு சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா நடிகை கங்கனா ரனாவத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமாக தலைவி படம் உருவாகி உள்ளது.

கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியுள்ள டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

யூடியூப் டிரெண்டிங்கில்

யூடியூப் டிரெண்டிங்கில்

கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி உள்ள தலைவி படத்தின் டிரைலர் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. தமிழில் 5.4 மில்லியன் ரசிகர்களும், இந்தியில் 9.5 மில்லியன் ரசிகர்களும் தெலுங்கில் 2.4 மில்லியன் ரசிகர்களும் இந்த டிரைலரை பார்த்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மகாபாரதம்

மகாபாரதம்

மகாபாரத போரையும் ஜெயலலிதாவின் அரசியல் வருகையையும் ஒன்று படுத்தி இயக்குநர் ஏ.எல். விஜய் வைத்துள்ள வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகளை பார்த்த அனைவருமே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். திரெளபதை போலவே ஜெயலலிதாவும் அரசியல் போரில் வென்றார் என்ற ரீதியில் திரைக்கதை அமைந்துள்ளது.

சென்னையில் கங்கனா

சென்னையில் கங்கனா

தலைவி படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையும் கேக் வெட்டி தலைவி டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே கொண்டாடினர். நிகழ்ச்சியில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்ட நடிகை கங்கனா கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை கிளப்பியது.

மும்பையிலும் டிரைலர் வெளியீடு

மும்பையிலும் டிரைலர் வெளியீடு

சென்னையை தொடர்ந்து நேற்று இரவு மும்பையிலும் நடிகை கங்கனா ரனாவத் இந்தி மொழி தலைவி டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். மும்பையிலும் நடிகை கங்கனா ரனாவத் கேக் வெட்டி தனது பிறந்தநாளை டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே கொண்டாடினார்.

ராம் கோபால் வர்மா பாராட்டு

ராம் கோபால் வர்மா பாராட்டு

பிரபல பாலிவுட் இயக்குநரும் சர்ச்சை இயக்குநர் என பெயரெடுத்த ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவி டிரைலர் மைண்ட் ப்ளோயிங் என பாராட்டி உள்ளார். மேலும், உங்களிடம் தனிப்பட்ட முறையில் சில கருத்து வேறுபாடு சில விஷயங்களில் எனக்கு இருக்கிறது. ஆனால், தலைவி படத்திற்காக நீங்கள் போட்டுள்ள உழைப்பு பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஆச்சர்யப்படுவார்

ஜெயலலிதா ஆச்சர்யப்படுவார்

சொர்க்கத்தில் இருந்து நிச்சயம் இந்த டிரைலரை பார்த்தால் ஜெயலலிதா சூப்பர் த்ரில் ஆகி விடுவார் என்றும் புகழ்ந்து தள்ளி உள்ளார் ராம் கோபால் வர்மா. அவருடைய ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்த கங்கனா ரனாவத், உங்கள் மேல் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடு இல்லை சார் என்று தனது பாணியில் நக்கலாகவே நன்றி தெரிவித்துள்ளார்.

சசிகலா பயோபிக்

சசிகலா பயோபிக்

லக்‌ஷ்மியின் என்.டி.ஆர் என்கிற படத்தை இயக்கி சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, அடுத்ததாக சசிகலாவின் பயோபிக் திரைப்படத்தை இயக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்து மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. தலைவி பட டிரைலரை புகழ்ந்து தள்ளிய நிலையில், சசிகலா பயோபிக்கை ராம் கோபால் வர்மா எப்படி இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X