twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இதுக்கு முன்னால சீரியசா கண்டுக்கமாட்டாங்க..' அந்த இயக்குனர், ஹீரோவை பாராட்டும் பிரபல டைரக்டர்!

    By
    |

    சென்னை: கன்னட சினிமா துறையை உலக வரைபடத்தில் கொண்டு வந்ததற்காக, இயக்குனர் பிரசாந்த் நீலையும், ஹீரோ யஷ்ஷையும் பாராட்டி இருக்கிறார், ராம் கோபால் வர்மா.

    யஷ், ஶ்ரீனிதி ஷெட்டி நடித்த கே.ஜி.எஃப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, கவனிக்கப்பட்டவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

    இந்தப் படத்துக்கு முன், அவர் கன்னடத்தில் ஶ்ரீமுரளி, ஹரிப்பிரியா நடித்த உக்ரம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

    பான் இந்தியா ஹீரோ

    பான் இந்தியா ஹீரோ

    மெகா பட்ஜெட்டில் உருவான கே.ஜி.எஃப், ஐந்து மொழிகளில் உருவாகி பலத்த வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி வசூலித்த முதல் கன்னட படம் இது என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் யஷ், பான் இந்தியா ஹீரோ ஆனார். இப்போது, அதன் இரண்டாம் பாகம், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

    எதிர்பார்ப்பு அதிகரிப்பு

    எதிர்பார்ப்பு அதிகரிப்பு

    முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி நடிகை ரவீனா டாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    யூடியூப்பில் சாதனை

    யூடியூப்பில் சாதனை

    கொரோனா காரணமாக திட்டமிட்டபடி படத்தை முடிக்கவில்லை. லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு இதன் ஷூட்டிங், அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கி இறுதிக் கட்டதை எட்டியுள்ளது. இந்த படத்தின் டீசர், ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகி யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

    பிரபாஸ் நடிக்கும் சலார்

    பிரபாஸ் நடிக்கும் சலார்

    இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள்ளாகவே இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான தொடக்கவிழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் யஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

    ராம் கோபால் வர்மா

    இந்நிலையில், பிரசாந்த் நீலை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பாராட்டியுள்ளார். 'கடந்த 2 வருடத்துக்கு முன்புவரை பாலிவுட், ஏன் தென்னிந்திய சினிமா கூட கன்னட சினிமா துறையை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. பிரசாந்த் நீலும், ஹீரோ யஷ்ஷும் உலக வரைபடத்தில் கன்னட சினிமாதுறையை கொண்டு வந்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    Recommended Video

    விஜய் படம் லாபம் இல்ல | Producer.K Rajan | Papillon pressmeet
    ஹொம்பாளே பிலிம்ஸ்

    ஹொம்பாளே பிலிம்ஸ்

    இதையடுத்து யஷ் ரசிகர்கள், ராம் கோபால் வர்மாவை பாராட்டி வருகின்றனர். கே.ஜி.எஃப் படத்தை தயாரிக்கும் ஹொம்பாளே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது

    English summary
    Filmmaker Ram Gopal Varma took to Twitter and praised Prashanth Neel, the director for KGF Chapter 2 and changing the face of Kannada film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X