பெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குநர்.. மகளுடன் ஒப்பிட்டு விளாசிய நெட்டிசன்கள்!
சென்னை: பெண்ணின் முன்னழகை கேவலமாக வர்ணித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
Recommended Video
தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. 58 வயதான ராம் கோபால் வர்மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
சக சினிமா பிரபலங்கள் பற்றி மட்டுமின்றி அரசியல் பிரபலங்களையும் விட்டு வைப்பதில்லை ராம் கோபால் வர்மா. தான் இறந்த பிறகு தனது உடலை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஸ்ரீதேவியின் அழகு
அடுத்தவர் மனைவி என்றும் பாராமல் ஸ்ரீதேவியின் அழகை கண்டப்படி வர்ணித்ததோடு கல்லறைக்கு அருகிலேயே அவரது உடலை புதைக்க வேண்டும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதோடு ஸ்ரீரெட்டி தொடர்பான சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

நடிகைக்கு பீர் அபிஷேகம்
ஸ்ரீரெட்டியுடன் தான் டேட்டிங் போனதாக வெளியான தகவலுக்கு பெண்களுடன் நான் வெளியே போவதில்லை எல்லாமே உள்ளேதான் என்று டபுள் மீனிங்கில் பதில் கொடுத்து மிரள விட்டார். ஏற்கனவே பிரபல நடிகைக்கு பார்ட்டியில் பீர் அபிஷேகம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

பாலியல் ரீதியாக
அண்மையில் பிரதமர் மோடி வீட்டில் விளக்கேற்ற சொன்னபோது, மின் விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு ஸ்டைலாக சிகரெட்டை பற்ற வைத்து ஏழரையை இழுத்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடைகளுக்கு முன்பு பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போட்டோவை ஷேர் செய்து பாலியல் ரீதியாக கருத்து கூறியிருந்தார்.

பெண்களின் போட்டோ
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தை கூறி வாங்கிக்கட்டி வருகிறார் ராம் கோபால் வர்மா. அதாவது பெண்கள் இருவர் காரில் அமர்ந்திருக்கும் போட்டோவை தனது டிவிட்டரில் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

முன்னழகு தெரியும்படி
அந்த போட்டோவில் முன்னால் அமர்ந்திருக்கும் பெண் ஏராளமான அணிகலன்களை அணிந்திருக்கிறார். பின்னால் அமர்ந்திருக்கும் பெண் பெரிதாக அணிகலன்கள் எதுவும் அணியவில்லை. ஆனாலும் லோ நெக் கவுனில், முன்னழகு தெரியும்படி அமர்ந்திருக்கிறார்.

கடவுள் உருவாக்கிய நகை
அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் ராம் கோபால் வர்மா, மனிதன் உருவாக்கிய நகை முன்னால் உள்ளது. கடவுள் உருவாக்கிய நகை பின்னால் உள்ளது என அந்தப் பெண்ணின் முன்னழகை வக்ரமாக வர்ணித்திருக்கிறார்.

உங்களின் மகளை கூட..
இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியிருக்கின்றனர். உங்களின் மகள் அந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் இந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என கேட்டு இயக்குநர் ராம்கோபால் வர்மாவை விளாசி வருகிறார்கள்.

மாராப்பு போட்டு
மற்றொரு நெட்டிசனான இவர், ராம் கோபால் வர்மா ஷேர் செய்த போட்டோவில் உள்ள பெண்ணுக்கு எடிட்டிங் மூலம் முன்னால் சேலையின் மாராப்பை போட்டு இப்போ பர்ஃபெக்ட் ராகி புரோ என கூறியுள்ளார்.

மூளை கெட்டு விட்டதா?
ராம்கோபால் வர்மாவின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், சர்க்கார், சத்யா போன்ற படைப்புகளை உருவாக்கிய ராம் கோபால் வர்மாவா இது? அவருக்கு மூளை கெட்டு விட்டதா என சாடியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











