twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிர்வாண போட்டோஷூட் சர்ச்சை..பெண்கள் கவர்ச்சி காட்டலாம்..ஆண்கள் காட்டக்கூடாதா? ராம் கோபால் வர்மா!

    |

    மும்பை : ரன்வீர் சிங்கின் சர்ச்சைக்குரிய போட்டோஷூட்டிற்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, லூட்டேரா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

    தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தார், சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் நாயகனாக நடிக்க உள்ளார்.

    இதுக்காகவே 'ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தை ரீமேக் செய்த அமீர்கான்: 'லால் சிங் சத்தா மூவிலயும் அந்த சீனா? இதுக்காகவே 'ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தை ரீமேக் செய்த அமீர்கான்: 'லால் சிங் சத்தா மூவிலயும் அந்த சீனா?

    சர்ச்சை போட்டோஷூட்

    சர்ச்சை போட்டோஷூட்

    நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ரன்வீர் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

    பெண்களை புண்படுத்திவிட்டார்

    பெண்களை புண்படுத்திவிட்டார்

    பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம், ஆனால் நீங்கள் சமூகத்தில் நிர்வாணமாக உலாவ வேண்டும் என்று அர்த்தமல்ல என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ராம் கோபால் வர்மா ஆதரவு

    ராம் கோபால் வர்மா ஆதரவு

    இந்நிலையில், சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ரன்வீரின் நிர்வாண புகைப்படங்கள் பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் என்றார். பெண்கள் தங்கள் கவர்ச்சியான உடலை காட்டும் போது. ஏன் ஆண்களால் காட்ட முடியாதா? ஆண்களை வேறு விதமாக மதிப்பிடுவது பாசாங்குத்தனமானது. பெண்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே போல ஆண்களுக்கும் உரிமை உண்டு என்றார்.

    18+ திரைப்படங்கள்

    18+ திரைப்படங்கள்

    மேலும், இறுதியாக இந்தியா வயதுக்கு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், இது பாலின சமத்துவம் குறித்த ரன்வீரின் அறிக்கை என்று நான் நினைக்கிறேன் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். இவர் க்ளைமாக்ஸ், நேகட், டேஞ்சரஸ் போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். இவர் இயக்கிய லட்கி: கேர்ள் டிராகன் கடந்த வாரம் திரையரங்கில் வெளியானது.

    English summary
    Gopal Varma gave a strong response when asked about Ranveer Singh’s nude photoshoot .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X