பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை.. வெளியானது சர்ச்சை இயக்குநரின் மிரட்டும் 'க்ளைமேக்ஸ்' ட்ரெயிலர்!
சென்னை: ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகும் க்ளைமேக்ஸ் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
Recommended Video
சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் என்றால் சட்டென ஞாபகத்துக்கு வரும் பெயர் ராம் கோபால் வர்மாதான். அந்த அளவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் குறித்து தாறுமாறாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அதோடு அவர் எடுக்கும் படங்களும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே இருக்கும். அண்மையில் பெண்களின் முன்னழகை வக்ரமாக வர்ணித்து சர்ச்சையில் சிக்கினார்.

க்ளைமேக்ஸ் படம்
இந்நிலையில் ராம் கோபால் வர்மா, க்ளைமேக்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். அமெரிக்காவின் பார்ன் ஸ்டாரும் ராம் கோபால் வர்மாவின் ஃபேவரைட் நடிகையுமான மியா மல்கோவா இப்படத்தில் லீடிங் ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது.

ஏகப்பட்ட காட்சிகள்
டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார் ராம்கோபால் வர்மா. அப்போதே படத்தில் லிப்லாக், செக்ஸ், நிர்வாண குளியல் என பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனை இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

எரிக்கும் ஹாட்
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா. அதில் ரெட் ஹாட் மியா மல்கோவின் க்ளைமேக்ஸ் படத்தின் எரிக்கும் ஹாட் ட்ரெயிலர்.. ப்ளீஸ் ஸ்டே கூல் என பதிவிட்டுள்ளார்.

எச்சரிக்கை
அந்த ட்ரெயிலரில் காதல் ஜோடி ஒன்று, ஜீப்பில் பாலைவனத்திற்கு செல்கிறது. உள்ளே வராதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் அந்த காதல் ஜோடி பாலைவனத்திற்குள் செம ஜாலியாக கொஞ்சியப்படி செல்கிறது.

பாலைவனத்தில்..
பாலைவனத்தில் உள்ள ஒரு குளத்தில் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் உடையை அவிழ்த்துவிட்டு குளிக்கின்றனர். பின்னர் இருவரும் பாலைவனத்தில் டென்ட் அடித்து தீ மூட்டி உடலுறவில் ஈடுபடுகின்றனர். அப்போது ஏதோ சத்தம் கேட்டு இருவரும் எழுந்து பார்க்கும் போது பாம் வெடித்து சிதறுவதாக உள்ளது.

காதலனை தேடும் மியா
பின்னர் இருவரையும் ஒரு கும்பல் பாலைவனத்தில் விரட்டுகிறது. கையில் சிக்கும் காதலனை அடித்து நொறுக்கும் அந்த கும்பல் அவரை தூக்கி செல்கிறது. இந்த மிரட்டல் கும்பலில் மாடர்ன் உடை அணிந்த பெண்களும் உள்ளனர். பின்னர் தனது காதலனை தேடி அலைகிறார் மியா மல்கோவா.

நிர்வாணமாக திரிந்து..
இதனை தொடர்ந்து அங்குள்ள குளத்தில் மொத்த ஆடைகளையும் களைத்து நிர்வாண குளியல் போடும் மியா, நிர்வாணமாகவே பாலைவனத்தில் சுற்றி திரிகிறார். மணலில் அவர் படுத்திருக்கும் நிலையில் அவரது உடலுக்கு கீழ் சூரியன் உதிப்பது போன்று வைக்கப்பட்டிருக்கும் ஷாட் வரவேற்பை பெற்றுள்ளது.

அடல்ட் காட்சிகள்
மொத்தத்தில் பாலைவனத்தில் காதல் ஜோடி சந்திக்கும் திகில் சம்பவத்தை மையப்படுத்தி க்ளைமேக்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ட்ரெயிலர் முழுக்க முழுக்க அடல்ட் காட்சிகளே நிரம்பி வழிகிறது. ஏற்கனவே மியா மல்கோவாவை வைத்து ஜிஎஸ்டி( காட் செக்ஸ் ட்ரூத்) என்ற படத்தை இயக்கியிருந்தார் ராம் கோபால் வர்மா.

ட்ரெயிலரும் சர்ச்சை..
அந்தப் படத்திலும் மியா பல காட்சிகளின் நிர்வாணமாகவே நடித்திருந்தார். இந்நிலையில் க்ளைமேக்ஸ் படத்தின் ட்ரெயிலரும் சர்ச்சைகளுக்கு பெயர் போயிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே இந்த ட்ரெயிலரை 50 ஆயிரம் பேர் வரை கண்டு ரசித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











