»   »  ரஜினிகாந்த், ஜெயலலிதாவைவிட பலம்மிக்கவர் இயக்குநர் ஷங்கர்! - ராம் கோபால் வர்மா மீண்டும் உளறல்

ரஜினிகாந்த், ஜெயலலிதாவைவிட பலம்மிக்கவர் இயக்குநர் ஷங்கர்! - ராம் கோபால் வர்மா மீண்டும் உளறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் நாட்டில் ரஜினிகாந்த், ஜெயலலிதா போன்றவர்களை விட பலம் வாய்ந்தவர் இயக்குநர் ஷங்கர்தான் என்று கமென்ட் அடித்துள்ளார் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா.

முன்பெல்லாம் தனது படங்களுக்காகப் பேசப்பட்ட ராம் கோபால் வர்மா, இப்போது தனது நாகரீகமற்ற கமென்ட்டுகள், சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளால் அதிகம் பேசப்படுகிறார்.

பப்ளிசிட்டிக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவது என்ற முடிவோடு அவர் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்.

Ram Gopal Varma's controversial comment against Rajini and Jayalalithaa

முன்பு சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் போன்றவர்களை வம்புக்கிழுத்து வாங்கிக் கட்டியவர், இப்போது ரஜினி, ஜெயலலிதா பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஷங்கரின் ஐ படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்த ராம் கோபால் வர்மாவுக்கு, அது மிகவும் பிடித்துப் போகவே, தன் கருத்தை ட்வீட் செய்துள்ளார்.

அதில் ஐ பட ட்ரைலர் பார்த்தேன். பிரமித்துவிட்டேன். ஐ படத்தோடு மோத நினைப்பவர்கள் முட்டாள்கள். ஷங்கரால்தான் இந்திய சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்த முடியும்.

தமிழகத்தில் ரஜினிகாந்த், ஜெயலலிதா இருவரை விட பலம் வாய்ந்தவர் ஷங்கர்தான். அவரது படங்கள் ரஜினி படங்களை விட பெரியவை. அதிக வசூல் குவிப்பவை. ஜெயலலிதாவை விட ஷங்கரின் செல்வாக்கு அதிகம், என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் ட்ரைலரைப் பாராட்டிவிட்டுப் போகாமல், ரஜினியையும் ஜெயலலிதாவையும் எதற்கு இவர் வம்புக்கிழுக்க வேண்டும் என ராம் கோபால் வர்மாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

English summary
Director Ram Gopal Varma once again released worst comments against Rajinikanth and Jayalalithaa.
Please Wait while comments are loading...