ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பெனி’…. 5 மொழிகளில் ரிலீஸ் !

சென்னை : ராம் கோபால் வர்மாவின் 'டி கம்பெனி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது. 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

ஆக்‌ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி என பல்வேறு பின்புலங்களில் உணர்வுகள் தத்ரூபமாக, சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்கு படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா

இவர் தற்போது 'டி கம்பெனி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி பற்றியதுதான் இத்திரைப்படம். தாவூத் இப்ரஹிம் 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேடப்படும் முக்கியக் குற்றவாளி என்பது அனைவரும் அறிந்த கதையே.

கம்பெனி

கம்பெனி

எல்லோருக்கும் தெரிந்த அந்தச் சம்பவத்தை நிழல் உலகத்தின் பின்னணியை சுவாரஸ்யம் குறையாமல் தத்ரூபமாகப் படமாக்கி 'டி கம்பனி' திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். கடந்த 2002-ல் 'கம்பெனி' என்றொரு திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார்.

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

இத்திரைப்படம் தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் பற்றி அரசல் புரசலாக வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், பில் கேட்ஸ், திருபாய் அம்பானி போன்ற தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறும் தொட்டுச் செல்லப்படுகிறது.

பலத்த வரவேற்பை

பலத்த வரவேற்பை

ஆனால், இப்போது உருவாகியுள்ள 'டி கம்பனி' திரைப்படமானது கராச்சியில் உள்ள தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜனின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஃப்ர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பெசலிஸ்ட

ஸ்பெசலிஸ்ட

ராம் கோபால் வர்மா படங்கள் என்றாலே கண்டிப்பாக சர்ச்சைகளும் , வித்யாசமான திரைக்கதை முடிச்சுகளும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது . ஆர்ஜிவி ரசிகர்கள் இந்தியா முழுவதும் நிறைய கருத்துக்களை பதிவு செய்து ட்ரெண்டிக் செய்வது வழக்கம். ஒரு பக்கம் தாறுமாறாக கம்மெண்ட்ஸ் வந்தாலும் இன்னொரு பக்கம் பாராட்டு மழை வந்து கொண்டே தான் இருக்கும். எப்படி பட்ட விமர்சனமாக இருந்தாலும் அதை சமாளிப்பதில் ராம் கோபால் ஒரு ஸ்பசலிஸ்ட். 2021 பல ஆச்சிரியங்கள் காத்து இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X