''இரண்டு பெண்களின் காதல் கதை ''… காதல் காதல்தான்… விவகாரமான படம்!

சென்னை : பாலிவுட்டின் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் காதல் காதல் தான் என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

Recommended Video

லெஸ்பியன் திரை கதையை கையில் எடுத்த ராம்கோபால் வர்மா! | Ram Gopal Varma

இந்த திரைப்படத்தில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலிக்கிறார்கள். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கில் ஏப்ரல் 8ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே, கோதன் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

காதல் காதல்தான் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ராம்கோபால் வர்மா, நைனா கங்குலி, அப்சரா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராம் கோபால் வர்மா, நிறைய காதல் திரைப்படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், இரண்டு பெண்களின் காதல் குறித்த திரைப்படம் வருவது இந்தியாவிலே இந்த படம் தான் என்றார். இந்த திரைப்படத்தை எடுப்பது மிகவும் சவாலானதாக இருந்தது என்றார் ராம்கோபால் வர்மா.

காதல் காதல்தான்

காதல் காதல்தான்

காதல் காதல்தான் திரைப்படத்தில் நடித்த நைனா கங்குலி, இந்த படம் ஒரு வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட திரைப்படம், இந்த படத்திற்காக ராம் கோபால் சார் என்னை அணுகிய போது எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால், அதன் பின் நடிக்க ஒத்துக்கொண்டேன். இரண்டு பெண்களை வைத்து டூயட் பாடல் எடுத்து ராம் கோபால் வர்மா அவர்களால் தான் முடியும். இப்படம் ஒரு க்ரைம், த்ரில்லர் திரைப்படமாகும்.

குற்றமாக பார்க்கப்படுகிறது

குற்றமாக பார்க்கப்படுகிறது

இந்த திரைப்படத்திற்காக ஆண் போல இருக்க பயிற்சிகள் எடுத்துக்கொண்டேன். இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க இயக்குநருக்கு உண்மையில் மிகப்பெரி தைரியம் தேவை. இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையை சொல்லும் இந்தபடத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று நைனா கங்குலி கூறினார் .

டேஞ்சரஸ்

டேஞ்சரஸ்

இப்படம் ஏப்ரல் 8 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்திற்கு இந்தியில் டேஞ்சரஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நைனா கங்குலி, அப்சரா ராணி, ராஜ்பால் யாதவ், மிதுன் புரதாரே, கோதன் சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X