முன்கூட்டியே லீக்கான பவர் ஸ்டார் ட்ரெயிலர்.. பணத்தை திருப்பி தருவதாக அறிவித்த சர்ச்சை இயக்குநர்!
சென்னை: ராம் கோபால் வர்மா இயக்கும் பவர் ஸ்டார் படத்தின் ட்ரெயிலர் முன்கூட்டியே இணையத்தில் கசிந்ததால் அதற்காக வசூல் செய்த கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
இயக்குநர் ராம் கோபால் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அரசியல் தலைவர்கள் சக நடிகர் நகைகள் என யாரையும் விட்டு வைப்பதில்லை.
அண்மையில் ஒடிசாவை சேர்ந்த தனது அடுத்தப்பட நாயகியின் அழகை புகழ்வதற்காக ஒடிசா மாநிலத்தை குறைத்து மதிபிட்டு டிவிட்டினார்.

கழுவி ஊற்றிய மக்கள்
இதனால் கடுப்பான அம்மாநில மக்கள் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை கண்டப்படி கழுவி ஊற்றினர். ஆனாலும் அடங்காத ராம் கோபால் வர்மா, அதே ஸ்டைலில் தனது அடுத்தப்படத்தின் ஹீரோவையும் அறிமுகப்படுத்தினார்.

புளு ஃபிலிம் ரேஞ்ச்
ஒடிசாவை குறைத்து பேசியதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை இயக்குநர் ராம் கோபால் வர்மா. அண்மைக் காலமாக அவர் இயக்கி வெளியிடும் படங்கள் எல்லாம் புளு ஃபிலிம் ரேஞ்சில் இருப்பதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கொள்ளை கட்டணம்
இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமால், முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்ததாக த்ரில்லர் என்ற படத்தை எடுத்து வருகிறார். தான் இயக்கி தயாரிக்கும் அனைத்து படங்களையும் தனது ஆன்லை தியேட்டரில் ரிலீஸ் செய்து கொள்ளை கட்டணத்தை வசூல் செய்து கல்லா கட்டி வருகிறார்.

பவர்ஸ்டார்
இந்நிலையில் நடிகர் பவன் கல்யாணை நைய்யாண்டி செய்யும் வகையில் பவர் ஸ்டார் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் ராம் கோபால் வர்மா. ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டியை வைத்து பவன் கல்யாணை அவதூறாக பேச வைத்தார் ராம் கோபால் வர்மா. தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணை சாடி வரும் ராம் கோபால் வர்மா பவர் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அவரை சாடியுள்ளார்.

ட்ரெய்லர் கசிவு
இதனால் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். இதன் ட்ரெயிலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார். ட்ரெயிலரை காண வேண்டும் என்றால் 25 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இன்று சொன்ன நேரத்திற்கு முன்பாகவே பவர் ஸ்டார் ட்ரெயிலர் இணையத்தில் கசிந்தது.

யூ டியூப்பில் ரிலீஸ்
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்த ராம் கோபால் வர்மா, ட்ரெயிலருக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் யூ டியூப்பில் இலவசமாக பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ளார்.

யாரும் நம்ப மாட்டார்கள்
ஆனால் பவர் ஸ்டாரின் ட்ரெயிலரை காண யாரும் கட்டணம் செலுத்தி இருக்க மாட்டார்கள், அதானால் தான் தானே கசிய விட்டுவிட்டு லீக்கானதாக நாடகமாடுகிறார் ராம் கோபால் வர்மா என பவன் கல்யாணின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முட்டாள்கள்தான் ராம் கோபால் வர்மாவின் இந்த கதையையெல்லாம் நம்புவார்கள் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











