சினிமா செத்துப்போச்சு.. மகேஷ் பாபுவுக்கும் ராஜமெளலிக்கும் சண்டை.. ராம் கோபால் வர்மா போஸ்ட் பாருங்க!
ஹைதராபாத்: இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கிய ப்ரோமோவை அசால்ட்டாக எந்தவொரு செலவும் இன்றி ஏஐ மூலமாக விஜய் vs அஜித், விஜய் vs சூர்யா, தனுஷ் vs சிம்பு, சிவகார்த்திகேயன் vs விஜய் சேதுபதி என தங்களுக்கு பிடித்த அனைத்து நடிகர்களையும் வைத்து அப்படியே அசால்ட்டாக ஏஐ மூலமாக உருவாக்கிய வீடியோக்களை நெட்டிசன்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
அத்தனை வீடியோக்களும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் முகபாவனைகள் என அனைத்துமே அப்படியே இருப்பது தான் இதில் பீதியை கிளப்புகிறது. நடிகர்கள் கால்ஷீட் இல்லாமல் இனி இதுபோன்ற வீடியோக்கள் மூலம் விளம்பரங்கள், குறும்படங்கள் ஏன் படங்களையே உருவாக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

இன்னொரு பக்கம் நடிகைகளை எந்தளவுக்கு ஆபாசமாக சித்தரித்து பார்க்க ஆசைப்படுகிறார்களோ அந்தளவுக்கு வக்கிர புத்தியுடன் உருவாக்கி காஜி மோடுக்கு சென்று விட்டனர். இந்நிலையில், ராஜமெளலி மற்றும் மகேஷ் பாபு சண்டை போடுவது போன்ற ஏஐ வீடியோவை இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ராஜமெளலி vs மகேஷ் பாபு சண்டை: காந்தா படத்தை போல இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் இடையே ஈகோ மோதல்கள் பல படங்களில் எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், வாரணாசி படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபுவும் அந்த படத்தின் இயக்குநர் ராஜமெளலியும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக அடித்துக் கொண்டு புரளும் வீடியோ ஒன்றை ஏஐ மூலம் நெட்டிசன் ஒருவர் உருவாக்க அது தற்போது டோலிவுட்டில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைத் தான் தற்போது பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
சினிமா செத்துப்போச்சு: மேலும், அந்த வீடியோவை ஷேர் செய்துவிட்டு அதற்கு கேப்ஷனாக "CINEMA IS DEAD" என பதிவிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. அடுத்த ஜெனரேஷன் ரசிகர்கள் மற்றவர்கள் உருவாக்கும் சினிமாவை பார்க்கப் போகிறார்களோ இல்லையோ, தங்களுக்கு பிடித்த மாதிரி தங்கள் மன வக்கிரங்களை ஏஐ உதவியுடன் இதுபோன்ற வீடியோக்களாக உருவாக்கப் போவது உறுதி என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications