ஹாலிவுட் நடிகைகளே பிச்சை எடுக்கணும்.. சில்க் ஸ்மிதாவின் ஏஐ எடிட்டை ஷேர் செய்த ராம் கோபால் வர்மா!
ஹைதராபாத்: இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் அதற்கெல்லாம் கவலைப்படுபவனா நான் என்பது போல அசால்ட்டாக சில்க் ஸ்மிதாவின் ஏஐ வீடியோ ஒன்றை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவை என்றுமே ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள் என்பதற்கு விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் அவரை ஏஐ மூலம் ரீக்ரியேட் செய்ததும் அந்த படமே 100 கோடி வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேலும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சில்க் ஸ்மித்தாவை ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக இந்த காலத்தில் எப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ள ஏஐ வீடியோ ஒன்றை ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ளார்.
எகிறும் ஏஐ வேல்யூ: செயற்கை நுண்ணறிவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும், சினிமாவில் அதன் பங்களிப்பு பல கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு செல்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய்யின் முதுமை மற்றும் இளமை கால ஏஐ எடிட் சமீபத்தில் டிரெண்டான நிலையில், அடுத்ததாக சில்க் ஸ்மிதாவின் ஏஐ வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியா ரசிகர்களின் கண்களை பறித்துள்ளன.
சில்க் ஸ்மிதா ரசிகர்களுக்கு சமர்ப்பணம்: மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை அவெஞ்சராகவும், கிளியோபாட்ராவாகவும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகையாகவும், ஸ்கை டைவிங், சர்ஃபிங் செய்யும் சாகச பெண்ணாகவும் அழகு ரதியாகவும், மருத்துவராக, மாணவியாகவும் குழந்தையாகவும் மாற்றி எடிட் செய்து பாடலுடன் உருவாக்கப்பட்டுள்ள ஏஐ வீடியோ தான் தற்போது செம டிரெண்டாக பரவி வருகிறது. இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பார்வையையே அந்த வீடியோ கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராம் கோபால் வெளியிட்ட வீடியோ: செக் மோசடி வழக்கில் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது ஒரு பக்கம் கிடக்கட்டும் என சில்க் ஸ்மிதாவின் ஏஐ எடிட் வீடியோவை வெளியிட்ட ராம் கோபால் வர்மா ஏஐ தொழில்நுட்பத்தால் இனிமேல் என்ன செய்ய முடியாது என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அந்தளவுக்கு சில்க் ஸ்மிதாவை தத்ரூபமாக கண் முன்னே வெவ்வேறு கெட்டப்பில் ஏஐ எடிட் செய்திருப்பது ஆச்சர்யத்தின் உச்சம் தான்.


Click it and Unblock the Notifications