RGV: அடக் கன்றாவியே.. சூர்யா படத்தை இயக்கியவரா.. இப்படி பிட்டு பட இயக்குநர் ரேஞ்சுக்கு மாறிட்டாரு!

ஹைதராபாத்: எப்போதுமே சர்ச்சையை தனது சட்டை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு சுற்றி வரும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. டோலிவுட்டில் இருந்து வெகு சீக்கிரமாகவே அப்போவே பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.

Ram Gopal Varma sit in front of Naked girls cut out shocks fans

அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்ரா 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.

61 வயதில் வேறலெவல் ஆட்டம்: தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்திற்கு கதை திரைக்கதை எழுதியவரே ராம் கோபால் வர்மா தான். இளம் வயதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை டாப் இயக்குநராக கலக்கிய வந்த ராம் கோபால் வர்மா கடந்த சில ஆண்டுகளாக பிட்டு பட இயக்குநராகவே மாறிவிட்டார்.

61 வயதில் நடிகை அப்சரா ராணியின் காலை நக்கியபடி எல்லாம் சமீபத்தில் இவர் வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்.

பிட்டு படங்கள்: அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை எல்லாம் இயக்கிய ராம் கோபால் வர்மா கடந்த 2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் கில்மா படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர், தொடர்ந்து அதே போன்ற பிட்டு படங்களையே இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் என பல படங்களை இயக்கி ஆர்ஜிவி வேர்ல்ட் என்பதையே புதிதாக உருவாக்கி உள்ளார்.

Ram Gopal Varma sit in front of Naked girls cut out shocks fans

நிர்வாண நடிகைகளுக்கு மத்தியில்: இந்நிலையில், லேட்டஸ்ட்டாக ராம் கோபால் வர்மா போட்ட போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் என்ன நிர்வாண நடிகைகளுக்கு மத்தியில் ராம்கோபால் வர்மா உட்கார்ந்து இருக்காரே என கலாய்த்து வருகின்றனர்.

நிர்வாண நடிகைகளின் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அமர்ந்தபடி எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "Their LIGHT made me DARK" என கேப்ஷன் கொடுத்துள்ளார். ராம் கோபால் வர்மா பெட்ரூமில் இந்த நிர்வாண நடிகைகளின் போஸ்டர் கட் அவுட் உள்ளதா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இந்தியாவின் நேக்கட் டைரக்டர் ராம் கோபால் வர்மா தான் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X