twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அர்னாப் பற்றி படம் எடுக்கப் போவதாக ராம் கோபால் வர்மா ட்வீட்.. படத்தின் டைட்டிலில் தான் சர்ச்சையே?

    |

    மும்பை: ரிபப்ளிக் டிவி சேனலின் இயக்குநர் அர்னாப் கோஸ்வாமியை பற்றி படம் எடுக்கப் போவதாக இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் பாலிவுட்டின் பெரிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வரும் அர்னாப் கோஸ்வாமிக்கும், சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கும் இடையே கிளாஷ் ஏற்பட்டுள்ளது.

    மேலும், அந்த படத்திற்கு, "ARNAB" THE NEWS PROSTITUTE என்ற சர்ச்சையை டைட்டிலை வைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

    புதிய சங்கம் தொடங்குவதா? பாரதிராஜாவுக்கு கடும் எதிர்ப்பு.. தயாரிப்பாளர்கள் நாளை அவசரக் கூட்டம்! புதிய சங்கம் தொடங்குவதா? பாரதிராஜாவுக்கு கடும் எதிர்ப்பு.. தயாரிப்பாளர்கள் நாளை அவசரக் கூட்டம்!

    சுஷாந்த் மரணம்

    சுஷாந்த் மரணம்

    கை போ சே, எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி, சிக்கோரே, தில் பெச்சாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நெப்போடிசம் காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    பாலிவுட் மாஃபியா

    பாலிவுட் மாஃபியா

    பாலிவுட்டின் பெரும் புள்ளிகளான மகேஷ் பட், சல்மான் கான், ஆதித்யா சோப்ரா, கரண் ஜோஹர் என பலரும் நெப்போடிசத்தை ஆதரிப்பதாகவும், அவர்கள் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு காரணம் என்றும், பாலிவுட் மாஃபியாவின் முகத்திரையை கிழித்தெறியாமல் விடமாட்டேன் என செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி தொடர்ந்து செய்திகளை போட்டு வருகிறார்.

    நெப்போடிசத்துக்கு ஆதரவு

    நெப்போடிசத்துக்கு ஆதரவு

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் பாலிவுட் நெப்போடிசத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று தொடர்ந்து வாதிட்டு வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. சுஷாந்த் சிங் ராஜ்புத் இறக்காமல் இருந்திருந்தால், இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு அவரது குழந்தைகளும் பாலிவுட்டில் நடிகர்கள் ஆகியிருப்பார்கள் என்றும் பதிவிட்டு இருந்தார்.

    அர்னாப்பை பற்றி படம்

    அர்னாப்பை பற்றி படம்

    இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான தனது கருத்தை தெரிவிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டு சர்ச்சை கிளப்பி இருக்கிறார் ராம் கோபால் வர்மா. அர்னாப்பை பற்றிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தின் டைட்டில் "ARNAB" THE NEWS PROSTITUTE என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

    Recommended Video

    Climax Trailer | Mia Malkova | Ram Gopal Varma | #Climax | RGV's Movie
    வில்லன்

    வில்லன்

    மேலும், பாலிவுட்டில் ஹீரோக்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கும் பெரும் புள்ளிகளான ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட், கரண் ஜோஹர், ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் பலருக்கும் கடைசியாக ஒன்றை சொல்கிறேன் எனக் கூறிய அவர், நம்மை கொடூரன்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கும் அர்னாப் போன்ற வில்லன்களையும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும், என்றும், உங்களின் அமைதி தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Ram Gopal Varma tweeted to make a film on Arnab Goswamy, who tirelessly attacking bollywood biggies on late Sushant Singh Rajput death case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X