சூப்பர் ஹிட் ‘ஐஸ்கிரீம்’ படத்தின் பட்ஜெட் ரூ 2 லட்சம் தான்... ராம்கோபால் வர்மா தகவல்

ஹைதராபாத்: கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீம் படத்தை ரூ 2 லட்சம் பட்ஜெட்டில் எடுத்து முடித்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் ராம்கோபால் வர்மா கூறிய தகவலால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர்கள் என்ற பேரையே பெருமையாக கருதும் இயக்குநர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மத்தியில் வேறுபட்டு குறைந்த பட்ஜெட்டில், மக்கள் ரசிக்கும் படியான படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் பிரபல இயக்குநரான ராம்கோபால் வர்மா.

கடந்த வெள்ளியன்று ஆந்திராவில் வெளியான "ஐஸ்க்ரீம்" திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா நேற்று பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:-

மொத்த பட்ஜெட்...

மொத்த பட்ஜெட்...

சஸ்பென்ஸ், த்ரில், காமெடி மற்றும் காதல் காட்சிகள் அடங்கிய இந்த "ஐஸ்க்ரீம்:" திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.2,11,832 ஆகும்.

சம்பளம் கொடுக்கவில்லை...

சம்பளம் கொடுக்கவில்லை...

இந்த படத்தில் நடித்த நவ்திப், தேஜஸ்வி, சந்தீப்தி உள்பட எந்த நடிகர், நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. நடிகர்களை போலவே அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

உடைகள் கூட...

உடைகள் கூட...

உடைகள் கூட நடிகர்களே அவர்களது வீட்டில் இருந்துதான் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

வாடகை வீடு...

வாடகை வீடு...

இந்த படத்திற்காக செலவு செய்தது ஒரே ஒரு வீட்டை நாங்கள் வாடகைக்கு எடுத்தவகையில் ஆன செலவுதான்.

நேச்சுரல் லைட்டிங்...

நேச்சுரல் லைட்டிங்...

மிக சாதாரண கேமிராவை கொண்டு, எந்த ஒரு லைட்டிங்ஸ் எபெக்ட் இன்றி எடுக்கப்பட்டதுதான் இந்த திரைப்படம். படம் முடிவடைந்ததும் ஒரே ஒரு நபர் கம்ப்யூட்டரில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்தார்.

சம்பளம் தர முடிவு...

சம்பளம் தர முடிவு...

தற்போது இந்த படம் வெற்றி பெற்று மாபெரும் வசூலை குவித்து வருவதால் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் கைநிறைய சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி விழாவில்...

வெற்றி விழாவில்...

இந்த படத்தின் வெற்றி விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும்.

ஐஸ்கிரீம் -2...

ஐஸ்கிரீம் -2...

இதே போன்ற குறைந்த செலவில், விரைவில் ஐஸ்கிரீம் -2 படத்தை தயாரிக்க உள்ளோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாராட்டு...

பாராட்டு...

யூடியூபில் வெளியிட ஒரு குறும்படம் எடுப்பதற்கே லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள இந்த காலத்தில் வெறும் இரண்டு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு முழு நீள திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்து சாதனை செய்த ராம்கோபால் வர்மாவை ஆந்திர சினிமாயுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X