இப்டி பண்ணிட்டீங்களே ரஜினி... கோச்சடையான் குறித்த ராம்கோபால்வர்மாவின் கருத்தால் சர்ச்சை
சென்னை: கோச்சடையானில் ரஜினியின் மார்பு குறித்து பிரபல இயக்குநர் ராம்கோபால்வர்மா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினியின் கோச்சடையான் படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ரஜினி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
ரஜினியின் மார்பை விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உங்களிடம் பிடித்ததே...
ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை.

எனக்குப் பிடிக்கலைப்பா....
கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

பதிலடி...
ராம்கோபால்வர்மா கருத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது பதில்களை தெரிவித்து வருகின்றனர்.

உளருகிறார்...
அதில், பலர் ‘முழுக்க முழுக்க மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கும் அனிமேஷனுக்கு வித்தியாசம் தெரியாமல் ராம்கோபால் வர்மா உளறுகிறார்' என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











