என் கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு.. ரொம்ப டேஞ்சரஸ்.. ராஜமெளலியை சீண்டிய ராம் கோபால் வர்மா!

சென்னை: லெஸ்பியன் கதையை டேஞ்சரஸ் என படமாக இயக்கி உள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா தமிழில் அந்த படத்தை 'காதல் காதல்தான்' எனும் டைட்டிலில் ரிலீஸ் செய்ய உள்ளார்.

அதுதொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பிரஸ் மீட்டிலும் ராம் கோபால் வர்மா தனது டேஞ்சரஸ் படத்தின் இரு கவர்ச்சி ஹீரோயின்களுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலியை சீண்டும் வகையில் அவர் போட்டிருக்கும் ட்விட்டர் போஸ்ட் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

லெஸ்பியன் படம்

லெஸ்பியன் படம்

இந்திய சினிமாவிலேயே முதல் லெஸ்பியன் கிரைம் த்ரில்லர் என்கிற அறிவிப்புடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் தமிழில் காதல் காதல்தான் எனும் தலைப்பில் வெளியாகிறது. அது தொடர்பான பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. ராம் கோபால் வர்மா படத்தில் லெஸ்பியனாக நடித்த நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணி என இரு ஹீரோயின்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புனீத் ராஜ்குமார் நினைவிடத்துக்கு

புனீத் ராஜ்குமார் நினைவிடத்துக்கு

முன்னதாக பெங்களூருவில் படத்தை புரமோட் செய்ய சென்றிருந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ஓவர் ஆபாசம்

ஓவர் ஆபாசம்

கிளைமேக்ஸ், நேக்கட் என படு ஆபாசமான படங்களை இயக்கி வெளியிட்டு வரும் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள டேஞ்சரஸ் படத்தில் நடிகைகள் நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணி லிப் லாக் முத்தம் கொடுப்பது, படுக்கையறை காட்சிகள் என எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளனர்.

ராஜமெளலியை வம்பிழுத்து

ராஜமெளலியை வம்பிழுத்து

இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்கு இயக்குநர் ராஜமெளலியையும் வம்பிழுத்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் இயக்குநர் ராஜமெளலி புரமோஷன் செய்தது போலவே தானும் தன்னுடைய இரு நடிகைகளுடன் புரமோஷன் செய்கிறேன் என்பதை சொல்லும் வகையில் போட்டுள்ள மீம் டிரெண்டாகி வருகிறது.

ரொம்ப டேஞ்சரஸ்

ரொம்ப டேஞ்சரஸ்

இயக்குநர் ராஜமெளலி சார் உங்களிடம் டேஞ்சரஸ் ஆன ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளார்கள் என்றால், என்னிடம் ரொம்ப டேஞ்சரஸ் ஆன பெண்கள் உள்ளனர் என நைனா கங்குலி மற்றும் அப்சரா ராணியுடன் இருக்கும் போட்டோவை போட்டு இயக்குநர் ராஜமெளலியை வெகுவாக சீண்டியுள்ளார்.

போத் ஆர் நாட் சேம்

போத் ஆர் நாட் சேம்

இந்தியாவின் பெருமை என கொண்டாடப்படும் படத்திற்கு இணையாக உங்களுடைய ஆபாச படத்தை கூச்சமே இல்லாமல் கம்பேர் பண்றீங்களே.. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு சமமானவர்களா? அந்த இரு ஆபாச நடிகைகள் என நெட்டிசன்கள் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X