Bharatna Jones - சர்ச்சையை கிளப்பிய ராம் கோபால் வர்மா.. இந்தியா பெயர் மாற்ற சர்ச்சைக்கு நெத்தியடி!

ஹைதராபாத்: இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றும் விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷால் இந்தியா என பெயர் மாற்றம் செய்வதால் என்ன இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து விடப் போகிறதா என கேள்வி எழுப்பி இருந்தார். ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது பாணியில் போட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது.

Ram Gopal Varma trolls India name change with Bharatna Jones tweet

ராம் கோபால் வர்மா ட்வீட்: இந்தியா என்கிற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்கிற பஞ்சாயத்து நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், Indiana Jones படத்தின் பெயரை Bharatna Jones என மாற்றிவிடலாம் என நக்கலடித்து போஸ்ட் போட்டு அதிர வைத்துள்ளார்.

செம காமெடி சார் என்றும் ப்ரூட்டல் என்றும் ராம் கோபால் வர்மா ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவினர் ராம் கோபால் வர்மாவை கமெண்ட்டுகளால் பொளந்து கட்டி வருகின்றனர்.

இண்டியானா என்பது அமெரிக்காவில் உள்ள மாகாணம் அதற்கும் இந்தியாவுக்குமே சம்பந்தம் இல்லை இது கூட தெரியாமல் கலாய்க்க வந்துட்டீங்களா என ராம் கோபால் வர்மாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Ram Gopal Varma trolls India name change with Bharatna Jones tweet

இந்தியாவின் ஹாரிசன் ஃபோர்ட்: இண்டியானா ஜோன்ஸ் படத்தின் ஹீரோ ஹாரிசன் ஃபோர்டுக்கு பதிலாக ராம் கோபால் வர்மாவின் போட்டோவை வைத்து ரசிகர் ஒருவர் எடிட் செய்த போட்டோவையும் ரீட்வீட் செய்து ரகளை செய்து வருகிறார் ராம் கோபால் வர்மா.

பாலிவுட், டோலிவுட்டில் ஏகப்பட்ட டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த ராம் கோபால் வர்மா, சமீப காலமாக பிட்டு படங்களை இயக்கி வருகிறார் என்கிற சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், அவர் பதிவிடும் ட்வீட்கள் எல்லாமே சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்தியாவின் பெயர் மாற்றத்தை வைத்து சர்காஸ்ட்டிக் ட்ரோல் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X