ராம்கோபால் வர்மா மீண்டும் சர்ச்சை பதிவு..நடிகர்கள் விவாகரத்துகள் நல்ல ட்ரெண்ட் செட்டர்கள் என ட்வீட்

சென்னை : சர்ச்சையான கருத்துக்களுக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா இன்றும் ஒரு சர்ச்சை ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு தற்போது கோலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தகைய விவாகரத்துக்கள் குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து

தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். இதனால் ரஜினியின் குடும்பத்தினர் மட்டுமின்றி கோலிவுட்டிலும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளது.

நாக சைத்தன்யா -சமந்தா விவாகரத்து

நாக சைத்தன்யா -சமந்தா விவாகரத்து

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டனர். அந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளவில்லை. அந்த விவாகரத்திற்கான காரணங்கள் குறித்த பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து

ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து

இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு தற்போது வெளியாகி ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சரியான நேரத்தில் வெளிப்படுத்திவரும் டைரக்டர் ராம்கோபால் வர்மா தற்போதும் இந்த விவாகரத்துக்கள் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

நல்ல ட்ரெண்ட் செட்டர்கள்

நல்ல ட்ரெண்ட் செட்டர்கள்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமணத்தின் ஆபத்துக்களைப் பற்றி இளைஞர்களை எச்சரிக்கும் நல்ல ட்ரெண்ட் செட்டர்களாக நட்சத்திரங்களின் விவாகரத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் இத்தகைய விவாகரத்துக்களை ஆதரிப்பதாக அவரது கருத்து காணப்படுகிறது.

அன்பை கொல்லும் விஷம்

அன்பை கொல்லும் விஷம்

மேலும் அவர் தனது தொடர் பதிவுகளில் திருமணத்தை போல அன்பை விரைவில் கொல்லக்கூடிய விஷயம் எதுவுமில்லை என்றும் திருமண கொண்டாட்டங்களை காட்டிலும் திருமணத்தின் மூலம் தோன்றும் காதல் மிக விரைவில் அழிந்து விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிர்கள் கண்டனம்

ரசிர்கள் கண்டனம்

எப்போது சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர்போன ராம் கோபால் வர்மா, தற்போது கையில் எடுத்திருப்பது திருமண பந்தம், அன்பு, காதல் உள்ளிட்டவற்றை. திருமண பந்தம் குறித்த இவரது கருத்துக்கள் ரசிகர்களிடையே மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X