விஜய்சேதுபதி ஆபிஸுக்கு திடீரென வந்த ராம்கோபால் வர்மா.. அவரை பார்த்துட்டு என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சமீபகாலமாக சர்ச்சை இயக்குநராக மாறி உள்ள அவர் பிட்டு பட ரேஞ்சுக்கு படங்களை எடுத்து வருகிறார்.
இந்நிலையின் திடீரென நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றவர் அவரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ராம்கோபால் வர்மா இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில் விஜய் சேதுபதி குறித்து ராம்கோபால் வர்மா ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ராம்கோபால் வர்மா: 1989 ஆம் ஆண்டு சிவா எனும் தெலுங்கு படத்தை நாகார்ஜுனாவை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் ராம்கோபால் வர்மா. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா படத்தின் கதை ஆசிரியர் இவர்தான். ரங்கீலா, சத்யா, அமிதாப் பச்சனின் சர்க்கார், சூர்யா நடித்த ரத்த சரித்திரா உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அந்த மாதிரி படங்கள்: கில்லிங் வீரப்பன், வீரப்பன், லட்சுமி என்டிஆர் என அரசியல் சர்ச்சை படங்களை இயக்கி வந்த ராம்கோபால் வர்மா திடீர்னு 'காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்', கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் உள்ளிட்ட படங்களை எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வெளிநாட்டு மாடல் அழகிகள் முதல் உள்நாட்டு நடிகைகள் வரை பலரை இந்த படங்களில் நிர்வாணமாகவும் அரை நிர்வாணமாகவும் ஆபாசமாகவும் நடிக்க வைத்துள்ளார்.

விவாகரத்து: ரத்னா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த ராம்கோபால் வர்மாவுக்கு ஒரு மகள் உள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தண்ணி, கன்னி என ராம் கோபால் வர்மா ஜாலியான லைஃபை வாழ்ந்து வருவதும் நிர்வாண படங்களை இயக்குவதுமாக ஆளே மாறிவிட்டார்.
விஜய் சேதுபதியுடன் சந்திப்பு: இந்நிலையில், திடீரென விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு வந்த ராம்கோபால் வர்மா அவரை சந்தித்த புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபதி ஸ்க்ரீனில் இருப்பதை விட நேரில் ரொம்பவே அழகாக உள்ளார் என வழக்கம் போல தனது ஸ்டைலில் ட்வீட் ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருவரும் இணைந்து விரைவில் படம் பண்ணப் போகிறார்களா? என்கிற கேள்வி தற்போது திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது


Click it and Unblock the Notifications