இந்த உடம்ப பார்த்ததும் 'கே' ஆகனும்னு ஆசை வந்துருச்சு.. நடிகரின் கட்டுடலில் மயங்கிய பிரபல இயக்குநர்!
சென்னை: பிரபல நடிகரின் கட்டுடலை பார்த்த இயக்குநர் தனக்கும் ஓரின சேர்க்கையாளராக ஆசை வருவதாக கூறியுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர். பிரபல தெலுங்கு நடிகர் என்டி ராம ராவின் பேரன் ஆவார்.
ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஜூனியர் என்டிஆர். சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார்.

ஆர்ஆர்ஆர்
நின்னு சூடலனி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஜூனியர் என்டிஆர். தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்தப் படம் வரும் ஆண்டி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையின் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடகிறார் ஜூனியர் என்டிஆர். இதனை முன்னிட்டு நேற்று முதலே அவரது ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை கொண்டாடத் தொடங்கி விட்டனர். சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

சிறந்த உடல்
இந்நிலையில் அவரது சிக்ஸ் பேக் கட்டுடல் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா. மேலும் அவரது உடலை பார்த்து வாவ்... என வாயை திறந்திருக்கும் ராம் கோபால் வர்மா, இதுதான் நான் பார்த்ததிலேயே சிறந்த உடல் என கூறியிருக்கிறார்.

உங்களுக்கு தெரியும்
அதோடு அந்த டிவிட்டில், அவரது க்ளைமேக்ஸ் படத்தின் ஹீரோயினும் அவரது ஃபேவரைட் நடிகையுமான மியா மல்கோவாவின் பெயரையும் டேக் செய்திருக்கிறார். ஜூனியர் என்டிஆரின் மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கும் ராம் கோபால் வர்மா, அவரது டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு, நான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

ஓரினச்சேர்க்கையாளர்
ஆனால் உங்களின் உடம்பை இந்த போட்டோவில் பார்த்த பிறகு ஓரினச்சேர்க்கையாளராக மாற விரும்புகிறேன். என்னா உடம்புடா நைனா என தனது பிரமிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் ஆதரவாக டிவிட்டியிருந்தாலும் மறுப்பக்கம் சரக்கு ஓவரா ஆயிடுச்சா என கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











