நான் செத்தா இந்த நடிகையின் கல்லறைக்கு பக்கத்தில்தான் எரிக்கனும்.. சர்ச்சை இயக்குநரின் கடைசி ஆசை!
சென்னை: நான் இறந்தால் நடிகை ஸ்ரீதேவி கல்லறைக்கு பக்கத்தில்தான் என் உடலை எரிக்க வேண்டும் என சர்ச்சைகளுக்கு பெயர்போன இயக்குநர் உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவரது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளாகும்.
அவரது படங்கள் மட்டுமின்றி அவர் பேசும் கருத்துக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சிக்கலில் இழுத்துவிடும். இதனால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

பிரபல இயக்குநர்
பிரபல இயக்குநர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா, தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியிருக்கிறார்.

கல்லறையில் வாழ ஆசை
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா, மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, தனக்கு வாழ்க்கையில் உயிர் வாழ ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது என்றால், அதனை நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில்தான் வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

உடலை எரிக்க வேண்டும்
மேலும் தன்னுடைய கடைசி ஆசை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகில் தனது உடை தகனம் செய்ய வேண்டும் என்பதுதான் என்றும் உருக்கமாக கூறியிருக்கிறார். அதோடு, ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என்றும் தெரிவித்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

உருகி பேசியிருப்பது..
தன்னுடைய வாழ்க்கையை யார் வேண்டுமானலும் படமாக எடுக்காலும் அதற்காக என்னிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். பெரும் பிரபலங்கள் குறித்து அதிரடியாக விமர்சித்து வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவி குறித்து உருகி உருகி பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கெட்ட கனவு
ஸ்ரீதேவி மரணமடைந்த போது மிகவும் துயரமுடன் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வந்தார் ராம்கோபால் வர்மா. குறிப்பாக, ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டாரா? யாராவது எழுந்து இதனை கெட்ட கனவு என்று சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

என்னை விட்டுவிட்டீர்களே..
அதோடு பெருமாள் முன்பு முன் ஸ்ரீதேவி மற்றும் ராம் கோபால் வர்மா நிற்கும் பழைய புகைப்படத்தை இயக்குநர் ட்விட்டரில் பதிவு செய்து, பாலாஜி ஸ்ரீதேவியை எடுத்துக் கொண்டு என்னை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள்? என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











