ஸ்கீரினை கிழிப்போம்.. தம்பி மண்ட பத்திரம்.. விஜய் ரசிகர்களை எச்சரித்த தியேட்டர் நிர்வாகம்!

தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று கூறிய விஜய் ரசிகர் ஒருவருக்கு தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாக பதில் அளித்துள்ளது.

Recommended Video

Bigil Teaser Leaked : Twitter-யில் Trend ஆன விஜய் பிகில் Teaser-வீடியோ

சென்னை: தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று கூறிய விஜய் ரசிகர் ஒருவருக்கு தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாக பதில் அளித்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் படம் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

சென்னை சாய்ராம் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது. நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிரச்சனை

பிரச்சனை

இந்த இசை வெளியீட்டு விழாவில் நிறைய பிரச்சனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விழா அரங்கிற்கு வெளியே விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். இதில் சில விஜய் ரசிகர்கள் மோசமாக காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்

விஜய் ரசிகர்

இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் இதே போல் டிவிட் ஒன்றை செய்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதில், பிகில் வெளியாகும் போது முதல் நாள் கூட்டம் அதிகமாக இருக்கும். நிறைய பேர் வருவார்கள். அதனால் தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

தியேட்டர்

தியேட்டர்

பிரபல ராம் முத்துராம் தியேட்டரை டேக் செய்து அவர் இந்த டிவிட்டை செய்து இருந்தார். இதற்கு வேகமாக பதில் அளித்த தியேட்டர் நிர்வாகம், ப்ரோ, நீங்கள் எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் காமெடிக்கு கூட தியேட்டர் ஸ்கீரினை கிழிப்போம் என்று கூற வேண்டாம்.

நேரடியாக

அதுவும் நேரடியாக தியேட்டர் ஓனரை பார்த்து இப்படி சொல்வது சரியான விஷயம் கிடையாது. ஸ்கீரின் கிழிந்தால் எப்படி நீங்கள் பொறுப்பு கிடையாதோ, அதேபோல் உங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு கிடையாது, கவனமாக இருங்கள் தம்பி, என்று டிவிட் செய்துள்ளார்.

நிர்வாகம் என்ன

நிர்வாகம் என்ன

அதோடு அந்த தியேட்டர் நிர்வாகம், தங்கள் பவுன்சர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஜிம் பாடியில் கலக்கலாக இருக்கும் 10+ ஆட்களின் புகைப்படங்களை வெளியிட்டு அந்த ரசிகரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து அந்த வீர தீரமான ரசிகர் தனது டிவிட்டை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X