லொள் லொள்.. உர் உர்.. ராம நாராயணன் ஸ்டைலுக்கு திரும்பும் தமிழ் சினிமா!

சென்னை: தமிழ் சினிமாவில் விலங்குகளை மையப்படுத்தி அதிக படங்கள் எடுத்த பெருமை ராம.நாராயணனையே சேரும். ஹீரோவை மையப்படுத்தியே படங்கள் வந்த நிலையில் தனக்கென ஒரு தனி பாணியையே உருவாக்கியவர் ராம.நாராயணன்.

ராம.நாராயணனுக்கு பிறகு தமிழில் விலங்குகளை மையப்படுத்திய படங்கள் குறைந்துவிட்டன. மேலும் விலங்குகள் இடம் பெற்றிருக்கும் படங்களுக்கு, அவை கொடுமைப்படுத்தப்படவில்லை என உறுதியளிக்க வேண்டிய விதியும் வந்ததால், அவற்றின் மீதான ஆர்வம் இயக்குநர்களுக்கு குறைந்து விட்டது.

Rama Narayanan trend returns

தற்போது விலங்குகளை மையப்படுத்திய படங்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்திய உதாரணம், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன். படம் முழுக்க நாயகனோடு ப்ரூனோ என்ற நாய் கதாபாத்திரமும் பயணித்திருக்கும்.

இதேபோன்று, அடுத்து உருவாகிக் கொண்டிருக்கும் முழு நீள விலங்கு திரைப்படம் தும்பா. இதன் ப்ரொமோஷன் வீடியோவில், இசை அமைப்பாளர் அனிருத்துடன் ஒரு புலியும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் வேகமாக தயாராகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தததை படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், கோடை விடுமுறையைக் குறி வைத்து படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கனா படத்தின் மூலம் கவனம் பெற்ற தர்ஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புலி இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸில் உருவாகி வருகின்றன. இந்த படம் ரிலீசானால் தமிழில் உருவான முழு நீள புலிப்படம் என்ற பெருமையை தும்பா பெறும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X