நடிகையின் சொத்தை பறித்துக் கொண்டேனா?: சரத்பாபு விளக்கம்
சென்னை: நடிகை ரமா பிரபாவின் வீட்டை பறித்துக் கொண்டதாக எழுந்த புகார் குறித்து நடிகர் சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சரத் பாபு 1980களில் நடிகை ரமா பிரபாவுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார். அதன் பிறகு அவரை பிரிந்து நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்தார். பின்னர் சினேகாவை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சரத்பாபு தன் வீட்டை பறித்துக் கொண்டதாக ரமா பிரபா புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து சரத்பாபு கூறியிருப்பதாவது,

மனைவி இல்லை
1990ம் ஆண்டு சினேகாவை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் நடிகை ரமா பிரபாவுடன் சேர்ந்து வாழ்ந்தேன். அவரை நான் திருமணம் செய்யவில்லை. அதனால் அவர் என் முதல் மனைவி கிடையாது.

சினிமா
நான் பிறந்ததில் இருந்தே வசதி படைத்தவன். நான் ஏன் ரமா பிரபாவின் வீட்டை அபகரிக்க வேண்டும்?. கே. பாலசந்தர் சார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஹீரோவாக அறிமுகமாகி 40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன்.

சரத் பாபு
ரூ. 60 கோடி மதிப்புள்ள விவசாய நிலத்தை விற்று சென்னை உமாபதி தெருவில் வீடு ஒன்றை வாங்கினேன். அந்த வீட்டில் வசிக்குமாறு ரமா பிரபாவிடம் கூறினேன். பின்னர் அந்த வீட்டை திரும்ப வாங்கிக் கொண்டேன்.

புகார்
என் வீட்டை நான் திரும்ப வாங்கிக் கொண்டேன். இதில் என்ன தவறு. என் பெயரை கெடுக்க நினைத்து தான் ரமா பிரபா என் மீது புகார் தெரிவித்து வருகிறார் என்று சரத்பாபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











