Maamannan - உதயநிதிக்கு மாமன்னன் கடைசி படமா?.. தடை விதியுங்கள் - நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பாளர்

சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ராம சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். முதல் இரண்டு படங்களிலும் காத்திரமான விஷயங்களை பக்குவமாக பேசியதன் காரணமாக உதயநிதியுடன் மாரி இணைந்திருக்கும் மாமன்னன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

மேற்கு மாவட்ட அரசியல்: படத்தின் கதை என்னவாக இருக்கும் என பலரும் யோசித்திருந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில் படம் மேற்கு மாவட்ட அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து மேற்கு மாவட்டங்களில் அதிமுக செய்யும் அரசியலைத்தான் உதயநிதியை வைத்து மாரி செல்வராஜ் பேசியிருக்கிறாரோ என்ற கேள்வியை பலரும் முன்வைத்தனர்.

 Rama Saravanan has filed a petition in the Madras High Court to ban the film Mamannan

இசக்கியின் அடுத்த வெர்ஷன் மாமன்னன்: இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய மாரி செல்வராஜ் தேவர் மகனில் வரும் இசக்கி அதிகாரத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் மாமன்னன் கதை என கூறி சர்ப்ரைஸ் கொடுத்தார். தேவர் மகனில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்திந்தது வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு கடைசி படம்: மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி இந்தப் படம்தான் எனது கடைசி படம் என தெரிவித்துவிட்டு மீண்டும் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பேன் என உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக மாரி செல்வராஜும் கூறிவந்தார்.

படத்துக்கு தடை: இந்நிலையில் மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என ராம சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஓஎஸ்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், "கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.

25 கோடி ரூபாய் இழப்பீடு: 20 சதவிகித படப்பிடிப்பு இன்னும் நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி அந்தப் படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் அவர் இழுத்தடிக்கிறார். எனவே ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்து தர வேண்டும். அதுமட்டுமின்றி ரூ.25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். மாமன்னன் படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X