»   »  தயாரிப்பாளர் சங்கம்-தலைவரான ராம.நாராயணன்

தயாரிப்பாளர் சங்கம்-தலைவரான ராம.நாராயணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன்போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சங்கத் தலைவர் பதவி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல்அறிவிக்கப்பட்டது. இதில் திமுகவைச் சேர்ந்த ராம.நாராயணன் தலைவர் பதவிக்குநிறுத்தப்பட்டார்.

அவரை எதிர்த்து நடிகர் விஜயகாந்த் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அவருக்கு அதிமுக ஆதரவு தரலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் விஜயகாந்த்போட்டியிடவில்லை.

இயக்குனர் பாபுகணேஷ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் அவரும்பின்னர் தனது மனுவை திரும்பப் பெற்று விட்டார்.

இதையடுத்து தலைவர் பதவிக்கு ராம. நாராயணன் போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் கே.முரளிதரன்வெளியிட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ள நிலையில் துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு கடும் போட்டிநிலவுகிறது.

இப்பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதிலும் ராம.நாராயணன் அணியினரேவெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil