விஷாலின் ‘அயோக்யா’.. இதோ பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சுல்ல!
அயோக்யா பட போஸ்டருக்கு பாமக கண்டனம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: விஷாலின் அயோக்யா பட போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என பொறுப்பான பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது அயோக்யா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில், போலீஸ் ஜீப்பின் பேனட்டில் கையில் பீர் பாட்டிலுடன் விஷால் அமர்ந்திருப்பது போன்று காட்சி உள்ளது.
இந்த போஸ்ட்ருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்துக்கு இதேபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. சர்கார் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட்டுடன் தோன்றிய விஜய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த போஸ்டர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











