’ரமய்யா வஸ்தாவய்யா...’ ஒரே தலைப்பில் இரண்டு படங்கள்: இரண்டிலும் நாயகி ஸ்ருதி
சென்னை: 'ரமய்யா வஸ்தாவய்யா' என ஒரே தலைப்பு கொண்ட 2 படங்களில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
மறைந்த ராஜ்கபூர் நடித்து, இயக்கிய படம் ஸ்ரீ 420. இப்படத்தில் இடம்பெற்ற பிரபல பாடல், 'ரமய்யா வஸ்தாவய்யா'. இந்த பாடல் வரியை தலைப்பாகக் கொண்டு இந்தியிலும், தெலுங்கிலும் தலா ஒரு படம் தயாராகி வருகிறது.
இதில் இன்னுமொரு ஒற்றுமை என்னவென்றால், இரண்டிலுமே நாயகி நம்ம ஸ்ருதி தான்.

ஹிந்தி ’ரமய்யா வஸ்தாவய்யா’ ...
'ரமய்யா வஸ்தாவய்யா' பாடல் வரியை தனது இந்தி படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் பிரபுதேவா. இப்படத்தில் புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். இப்பட ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது.

உனக்கும்... எனக்கும்...
தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் படம், தெலுங்கு படத்தின் ரீமேக். தெலுங்கு படத்தை இயக்கியவர் பிரபுதேவா. இப்போது அதே படத்தை இந்தியில் அவர் இயக்கி வருகிறார். இப்படத்துக்குதான் ரமய்யா வஸ்தாவய்யா என தலைப்பிட்டுள்ளார்.

தெலுங்கு ’ரமய்யா வஸ்தாவய்யா’ ...
இதற்கிடையே அதே 'ரமய்யா வஸ்தாவய்யா' என்ற பெயரிலேயே தெலுங்கிலும் ஒரு படம் உருவாகிறது.

சமந்தாவுக்கு அடுத்த ஹீரோயின்...
இதில் ஜூனியர் என்டிஆர் ஹீரோ. சமந்தா ஹீரோயின். இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு பலரிடம் பேசி கடைசியாக ஒப்பந்தமானவர் ஸ்ருதி.

அது வேற... இது வேற...
இது குறித்து ஸ்ருதி கூறுகையில், நான் நடிக்கும் இரண்டு படங்களுக்கும் ஒரே பெயர் அமைந்தது, ஏதேச்சையாக நடந்தது. பெயர் ஒன்றாக இருந்தாலும் இரண்டு படங்களுக்கும் 1 சதவீதம் கூட ஒற்றுமை இருக்காது. இரண்டுமே இரண்டு வகையான படங்கள். அதே போல் எனது கேரக்டரும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இருக்காது. அந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











