எதிர்ப்பு எதிரொலி: வேலையில்லா பட்டதாரியில் சர்ச்சை வசனம் நீக்கம்
வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதாக படத்தின் இயக்குநர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
தனுஷ், அமலாபால் ஜோடியாக நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் ராம கிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின.

சர்ச்சைக்குரிய வசனம்
வேலை இல்லாமல் இருக்கும் தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தன்னை படிக்க வைத்ததால் வேலை கிடைக்கவில்லை என்றும், தம்பியை செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படிக்க வைத்ததால் வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவது போல் படத்தில் வசனம் உள்ளது.

வசனத்திற்கு எதிர்ப்பு
ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாக்தினரும், மாணவர்களும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

தனுஷ் வீடு முற்றுகை
ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகா சார்பில் முற்றுகை போராட்டமும் நடைபெற்றது.

தனுஷ்க்கு கடிதம்
சேலம் ராமகிருஷ்ணா மினஷன் ஆசிரம செயலாளர் சுவாமியதாத்மானந்தரும் வசனத்தை நீக்கும்படி தனுசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ராம கிருஷ்ண மிஷன் பள்ளி பற்றி சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டது.

வசனம் நீக்கம்
இது குறித்து வேலையில்லா பட்டதாரி இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்கவில்லை.
இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் சிந்திக்கவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











