புருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?-ரமலத்தின் தோழி கடும் சாடல்

By Chakra

Ramalath
பசிக்கிறது சோறு போடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதற்காக புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?, என்று நடிகை நயனதாராவை பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் தோழியும் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனின் மருமகளுமான ஜெயந்தி கடுமையாக சாடியுள்ளார்.

நயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி கண்ணப்பன். இவர் ரமலத்தின் குடும்பத் தோழி ஆவார். அத்தோடு சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மறைந்த கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் ஏஎல் சீனிவாசனின் மருமகள் இவர்.

ரமலத் விவகாரம் குறித்து ஜெயந்தி கூறுகையில், "நயன்தாராவுக்கு வெளி உலக அனுபவம் இல்லை. குறிப்பிட்ட வளையத்துக்குள் இருக்கிறார். அவர் வெளியே வந்து உலகத்தை பார்க்க வேண்டும். பசிக்கிறது என்று கேட்டால் சாதம் கொடுக்கலாம். புருஷனை கேட்டால் எந்த பெண்ணாவது கொடுப்பாளா?

நயன்தாரா சிறந்த நடிகை. தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள கலாசாரம் மீது அவர் கொள்ளி வைப்பது அழகல்ல. ரம்லத் கோர்ட்டுக்கு போய் உள்ளார். அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்," என்றார் ஜெயந்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X