மனைவிக்கு பணம் தருவதை நிறுத்தினார்... ஆதரவாளரை மிரட்டினார்.. பிரபு தேவா மீது பரபரப்பு புகார்!

மேலும் அவரது இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவு உள்பட எதற்குமே பணம் தருவதை நிறுத்தியதால் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார் ரம்லத். செலவைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே வழக்கு விவகாரங்களில் ரம்லத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் பெண் தயாரிப்பாளரையும் பிரபு தேவா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பிரபுதேவா- ரம்லத் தம்பதிக்கு பசவராஜு, நிஷி ராகவேந்திரா, ஆதித்தேவா ஆகிய மூன்று மகன்கள். இவர்களில் மூத்த மகன் பசவராஜ் புற்றுநோய் பாதிப்பால் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
அதன்பிறகு அண்ணா நகரில் உள்ள வீட்டில் மனைவி குழந்தைகளுடன் பிரபுதேவா குடியேறினார். வீட்டு செலவுகள், வேலையாட்கள், டிரைவர் சம்பளம், பெட்ரோல் செலவு என அனைத்து செலவுகளையும் பிரபுதேவாவே கவனித்து வந்தார். இதற்கே மாதம் ரூபாய் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் செலவானதாம்.
இந்த தொகையை மாதம்தோறும் ரம்லத்திடம் கொடுத்துவிடுவாராம். வெளியூர் படப்பிடிப்புகளில் இருந்தாலும் தவறாமல் பணம் அனுப்பி வந்தாராம். நயன்தாராவுடன் காதல் மலர்ந்த பிறகும் ரம்லத்துக்கு பணம் கொடுப்பதை தொடர்ந்து வந்தார்.
ரம்லத் தற்போது பிரபுதேவா- நயன்தாரா திருமணத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போய் இருப்பதால் செலவுக்கு பணம் வருவதை முற்றாக நிறுத்திவிட்டாராம் பிரபுதேவா. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வீட்டுக்கு வருவதையும் பிரபுதேவா நிறுத்திவிட்டார்.
இதனால் அன்றாட குடும்ப செலவுகள் மற்றும் நீதிமன்ற செலவுகளை கவனிக்க முடியாமல் ரம்லத் கஷ்டப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். நகைகளை அடமானம் வைத்து செலவைச் சமாளிக்கிறாராம் ரம்லத்.
இதற்கிடையில் குடும்ப நல நீதிமன்றம் இரண்டாவதாக அனுப்பியுள்ள சம்மன் பற்றி மும்பை வக்கீல்களுடன் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஆலோசித்து வருகின்றனர். அடுத்த மாதம் 23-ந் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நேரில் ஆஜராவார்களா.. அலவ்லது வாய்தா வாங்குவார்களா என்பது தெரியவில்லை.
ஆதரவாளருக்கு மிரட்டல்
இதற்கிடையே மனைவி ரம்லத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரபல தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பனை பிரபுதேவா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
எந்த அடிப்படையில், என்னைப் பற்றி ரம்லத்தும் நீங்களும் மீடியாவுக்கு பேட்டி கொடுக்கிறீர்கள் என்று கோபத்துடன் கேட்டாராம் பிரபுதேவா. இனி எக்காரணம் கொண்டும் என் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று அவர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











