திரைத் துளி

By Staff

பாம்பை நாதஸ்வரம் ஊத வைத்து, குரங்கை கார் ஓட்ட வைத்து நம்மையெல்லாம் புல்லரிக்கச் செய்தவர் இயக்குனர் ராமநாராயணன்.

பின்னர் பக்திப் படங்களில் இறங்கியவருக்கு அனிமேசன் கை கொடுக்க, தெய்வத்தின் கண்களில் இருந்து ஈட்டிகளை பாயச்செய்தார். வேப்ப மரத்தை லாரியாகவும் மாறச் செய்தார்.

அனிமல் பிளஸ் அனிமேஷன் புகழ் இயக்குனரான ராம. நாராயணன் காமெடி படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். மிருகங்களைஇயக்கி இயக்கி போர் அடித்துவிட்டதோ என்னவோ.

ராம நாராயணனுக்கு காமெடி சினிமா புதிதல்ல. சகாதேவன் மகாதேவன் போன்ற காமடிப் படங்களையும் இயக்கியுள்ளார்.இடையில் அனிமேஷன் அம்மன்களை தமிழ்த் திரையுலகிற்கு வழங்கினார். இப்போது மீண்டும் காமடிக்குத் திரும்புகிறார்.

ராம நாராயணன் அடுத்து இயக்கப் போகும் படத்தின் பெயர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. சுத்தமான நகைச்சுவைப் படம். ராம்கிதான் நாயகன். ரோஜா நாயகி. இவர்கள் தவிர விவேக், கோவைசரளா, விந்தியா, தம்ப்ரிரி வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும்உள்ளார்கள்.

என்.கே. விஸ்வநாதன் கேமரா வைக் கையாளுகிறார். கஜேந்திர குமார் வசனங் ளைத் தீட்டுகிறார். ராம நாராயணன் இயக்குகிறார்.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராதா படத் தைத் தயாரிக்கிறார்.

வெண்ணிற ஆடை மூர்த்தியை அனிமேஷனில் சிரிக்க விடாமல் இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X