Ramani Ammal Death: நீ சிங்கா இருக்கலாம்.. பாட்டுன்னு வந்துட்டா நான் சிங்கம்.. கர்ஜித்த ரமணியம்மாள்

சென்னை: பிரபல பின்னணி பாடகி ரமணியம்மாள் காலமான செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் இடம்பெற்ற சந்தியா வயசுக்கு வரும் பாடலில் தான் முதன் முதலில் திரையில் இவர் குரல் ஒலித்தது.

பல திரைப்படங்களுக்கு பாடியுள்ள ரமணியம்மாளுக்கு மிகப்பெரிய மேடையாக ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி அமைந்தது.

எம்ஜிஆர் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

எம்ஜிஆர் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

கண்ணாதசன் வரிகளில் உருவான பாடல்கள் மற்றும் எம்ஜிஆர் பட பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். சின்ன வயசுல பாவாடை சட்டைப் போட்டுருக்கப்பவே கடைகளில் விற்கும் எம்ஜிஆர் பட பாடல் புத்தகங்களை வாங்கிக் கொண்டு பாட ஆரம்பித்தேன். அப்படித்தான் பாட்டு பாடுவதை கற்றுக் கொண்டேன். தனியா எந்த இசை வகுப்புக்கும் சென்றதில்லை என பழைய பேட்டிகளில் வெளிப்படையாக பேசி உள்ளார் ரமணியம்மாள்.

சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்

சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல்

ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் இசை ரசிகர்கள் என பலரும் ரமணியம்மாளின் திடீர் மரணத்தால் ரொம்பவே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல வருடஙக்ளாக பத்து பாத்திரம் தேய்த்து வறுமையில் வாடி வந்த ரமணியம்மாள் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்து பாடி வரும் நிலையில், மறைந்தது அனைவரது மனங்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

நீ சிங்குனா நான் சிங்கம்

நீ சிங்குனா நான் சிங்கம்

மனதில் பட்டதை மறைத்து வைக்காமல் வெளிப்படையாக பேசி வந்த ரமணியம்மாள் 2018ல் நடந்த ஜீ தமிழ் நடத்திய சரிகமப போட்டியின் இறுதிச்சுற்றில் 5 போட்டியாளர்களுடன் போட்டிப் போட்டார். அதில் ஒருவர் சிங் என்பதால், அவரிடம் நீ சிங்கா இருக்கலாம். ஆனால், பாட்டுன்னு வந்தா நான் சிங்கம்னு சொல்லிட்டேன்.. அது புரிந்ததா இல்லையன்னு தெரியல, அவர் சிரித்து விட்டார் என தனது த்ரோபேக் பேட்டியில் ரமணியம்மாள் பேசியதை தற்போது ரசிகர்கள் ரீவைண்ட் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜீ தமிழ் இரங்கல்

ஜீ தமிழ் இரங்கல்

சமீபத்தில் மறைந்த வாணிஸ்ரீ ஜெயராமுக்கு முன்பாக ரமணியம்மாள் பாட்டுப் பாடிய அற்புத தருணங்களை தொகுத்து தற்போது வீடியோவாக வெளியிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி We Miss You ரமணியம்மாள் என பதிவிட்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அந்த போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரமணியம்மாள் ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X