பிக்பாஸ்... ரோடு சைட் ரோமியோக்களாக வலம் வரும் யோகி பாபு கூடவே ராமரும்

Recommended Video

Bigg Boss Movie : Yogi Babu Anjali Pairs | பிக் பாஸ் 3 வீட்டில் அஞ்சலியும், யோகி பாபுவும்

சென்னை: விஜய் டிவி ராமரும், யோகி பாபுவும் பிக் பாஸ் படத்தில் அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் ரோடு சைடு ரோமியோக்களாக கலக்கவிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் படம் முழுவதுமாக பயணிப்பார்கள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

பலூன் திரைப்படத்தை இயக்கிய கே.எஸ்.சினீஷ் ஒரு முழு நீள ஃபேண்டஸி காமெடி திரைப்படத்தை தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதியன்று ஒரு சிறப்பு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படம் குறுகிய காலத்தில் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

Ramar and Yogi Babu Act in Big Boss Film

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் திரில்லர் படங்களாகவோ அல்லது சமூக அக்கறையுள்ள படங்களாகவோ தான் இருந்து வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ஒரு முழு நீள காமெடி படத்திற்கான கதையை வடிவமைத்துள்ளார். பலர் நகைச்சுவை படமாக எடுத்தாலும் அதன் சுவாரஸ்யம் படம் முழுவதுமாக நீடிப்பதில்லை. ஆனால் இந்த கதை ஒரு சுவாரஸ்யமான முழு நீள ஃபேண்டஸி காமெடி படமாக இருக்கும்.

இப்படத்தில் பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் அஞ்சலி தான் இந்த திரைப்படத்தின் ஹைலைட். கூடுதல் நகைச்சுவை சேர்க்க ஸ்டார் விஜய் தொலைக்காட்சி புகழ் ராமர் மற்றும் பல படங்களில் முழு கதாபாத்திரமாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரமாகவோ நகைச்சுவையில் தற்போது கலக்கி வரும் யோகி பாபுவும் இணைகிறார்கள்.

அஞ்சலியை ஒரு தலையாக காதல் செய்யும் ரோடு சைடு ரோமியோக்களாக கலக்கவிருக்கிறார்கள் ராமரும், யோகி பாபுவும். இவர்கள் சில காட்சிகளில் மட்டும் தோன்றாமல் படம் முழுவதுமாக பயணிப்பார்கள். மேலும் சில கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும்.

இப்படத்திற்காக அஞ்சலியை தேர்வு செய்வதற்கான காரணம் அவரின் நகைச்சுவை வரவழைக்கும் நடிப்பு, தனித்துவமான பண்புகள், குணாதிசயங்கள் என பார்க்கும் போது அவர் தான் முன்னிலையில் இருந்தார். படத்தின் கதையைக் கேட்டதுமே ஆர்வத்தில் அஞ்சலி உடனடியாக படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். இப்படம் அஞ்சலிக்கு நிச்சயம் நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பது உறுதி.

ஆர்வி ஒளிப்பதிவில் இப்படத்திற்கு கலை இயக்குனராக பணிபுரிகிறார் சக்தி வெங்கட்ராஜ். பெயரிடப்படாத இந்த படத்தின் பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுத, இசையமைக்கிறார் விஷால் சந்திரசேகர். அதிரடி சண்டைக் காட்சிகளை இயக்குகிறார் திலீப் சுப்புராயன். படத்தின் எடிட்டிங் காட்சிகளை ரூபன் கவனித்து கொள்கிறார்.

காமெடி படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் அப்படி இருக்கையில் ஒரு முழு நீள ஃபேண்டஸி காமெடி படம் என்றால் சொல்லவா வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X