‘ராமர் பாலம்’... தலைப்பிற்கா பஞ்சம்.. மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சைத் தலைப்பு!

ராமர்பாலம் என்ற பெயரில் காதல் படம் ஒன்று உருவாகியுள்ளது.

சென்னை: சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ளது 'ராமர் பாலம்' படம்.

கர்ணன் மாரியப்பன் மற்றும் எம்.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் 'ராமர் பாலம்'. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக 'பீச்சாங்கை' கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் இயக்குனராக முடிவெடுத்து சென்னையில் செட்டிலாகிவிட்டார்.

காதலால் உருவானது:

காதலால் உருவானது:

ராமாயணத்தில் ராமர் சீதையின் மீது கொண்ட காதலால் ராமர் பாலம் உருவானது. அதேபோல தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரண்டு ஊர்களுக்கு இடையே பாலம் கட்ட நினைக்கிறார்கள் ஊர்மக்கள். ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை. ஆனால் ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு பாலம் வருகிறது. அது எப்படி என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

நிஜப் பாலம்:

நிஜப் பாலம்:

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நீண்டநாளாக இப்படி ஒரு பாலம் கட்டப்பட வேண்டும் என்பது அந்தப்பகுதியில் உள்ள இரண்டு ஊர் மக்களின் விருப்பமாக இருந்ததாம். இந்தப்படம் எடுத்து முடிக்கவும், அங்கே பாலம் கட்டி முடிக்கவும் சரியாக இருந்ததாம்.

பாடல்கள்:

பாடல்கள்:

விக்ரமனிடம் துணை இயக்குனராக இருந்தவரும் 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்கிற சூப்பர்ஹிட் பாடலை எழுதியவருமான கலைக்குமார் இப்படப் பாடல்களை எழுதியுள்ளார். கோபால் இசையமைத்துள்ளார்.

விரைவில்

விரைவில்

ஆனந்த் சரவணன்-காளிமுத்து இருவரும் ஒளிப்பதிவை கவனிக்க, .பி.செல்வமணி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். போஸ்ட் புரொடக்சன் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தப்படம் இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது.

சர்ச்சைத் தலைப்பு:

சர்ச்சைத் தலைப்பு:

ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பாக பல பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்க, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இதனையே படத்தலைப்பாக்கி இருக்கின்றனர். இதனால் நிச்சயம் பட ரிலீஸ் சமயத்தில் குறிப்பிட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X