திரைத் துளி
அது என்னவோ புரியல, என்ன மாயமோ தெரியல, ராமராஜனுக்கு அவ்வப்போது எப்படியாவது படம் வந்து கொண்டேஇருக்கிறது.
ஒரு காலத்தில் ரஜினி, கமல் படங்களுக்கு இணையாக இவரது படங்கள் விலைபோயின. மதுரை பக்கத்துக்கு கிராமங்களில்எடுக்கப்பட்ட இவரது பல படங்கள் கோடிகளைக் குவித்தன.
பின்னர் பேண்ட் போட்டார், போலீஸ் உடுப்பு போட்டார், டி-சர்ட் போட்டுக் கொண்டு லிப்ஸ்டிக் சகிதமாக நடித்தபோது தனதுமார்க்கெட்டை இழந்தார். ஆனாலும் மார்க்கெட் போன பிறர் மாதிரி சுத்தமாக படமே இல்லாமல் இவர் இருப்பதில்லை.திடீரென ஏதாவது ஒரு படம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
உடல் ஊதி, கன்னமெல்லாம் உப்பிப் போய் தூத்துக்குடி உப்பளம் போல காணப்படும் ராமராஜனுக்கு புதிதாக ஒரு படம்கிடைத்துள்ளது. அவருக்கு ஜோடியாக தேவயானி நடிக்கவுள்ளார்.
படத்தின் பெயர் ஆசை வெச்சேன் உன் மேல (அட, அட !). படத்தை இயக்கப் போவது ராஜதுரை. குறுகிய கால தயாரிப்பாகஇந்தப் படம் இருக்குமாம். வழக்கமான கிராமத்துக் காதல் கதையாக இல்லாமல், வித்தியமான கோணத்தில் படத்தைஎடுக்கவுள்ளாராம் ராஜதுரை.
எப்படி எடுத்தால் என்ன, தேவயானிக்கு இன்னொரு புது படம் கெடச்சாச்சு என்று புன்னகைக்கிறது கோடம்பாக்கம்.


Click it and Unblock the Notifications











