Ramarajan: “ஜெயிலரை விட லியோ பிஸினஸ் அதிகம்ன்னு கேள்விப்பட்டேன்..” கொளுத்திப் போட்ட ராமராஜன்!
சென்னை: 1980களில் ரஜினிக்கே டஃப் கொடுத்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். ஒருகாலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை விடவும் அதிக சம்பளம் வாங்கியவர்.
30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் ராமராஜன், ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினியை பாராட்டியுள்ளார். மேலும் ஜெயிலர், லியோ படங்களின் பிஸினஸ் குறித்து அவர் பேசியது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஜெயிலரை விட லியோ பிஸினஸ் அதிகம் : 1986ம் ஆண்டு வெளியான 'நம்ம ஊரு நல்ல ஊரு' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ராமராஜன். எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே என கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படங்களில் நடித்தே ரசிகர்களின் மனதை வென்றார். 'எங்க ஊரு காவல்காரன்' படத்தில் நடித்த போது 'மக்கள் நாயகன்' என்ற டைட்டில் இவருக்கு கிடைத்தது.
1989ல் வெளியான கரகாட்டகாரன் ராமராஜன் கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கே டஃப் கொடுத்தார். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனை விடவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார் ராமராஜன்.
இந்நிலையில், ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் குறித்து ராமராஜன் பேசியுள்ளார். அதேபோல், விஜய்யின் லியோ படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிஸினஸ் பற்றியும் ராமராஜன் பேசியது வைரலாகி வருகிறது. அதாவது "ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்துள்ளது குறித்து கேள்விப்பட்டேன். ரஜினி இந்த வயதிலும் இப்படி கமர்சியல் ஹிட் கொடுப்பதை பாராட்டியே ஆகவேண்டும். ஆனாலும், நான் இன்னும் ஜெயிலர் பார்க்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
விஜய்யின் லியோ திரைப்படத்தையும் ராமராஜன் பாராட்டியுள்ளார். விஜய்யின் லியோ ப்ரீ-தியேட்டர் பிஸினஸ் குறித்து பாசிட்டிவான செய்திகள் வருகின்றன. ரஜினியின் ஜெயிலரை விடவும் லியோ பிஸினஸ் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ராமராஜன் தெரிவித்துள்ளார். ராமராஜன் உட்பட பலரது கணிப்பின் படி லியோ தான் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தும் என தெரிகிறது.
1980களின் இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்தவர் ராமராஜன். இவரே தற்போது விஜய்யின் லியோ படம் மீது கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தின் அபிஸியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 375 கோடி ரூபாய் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதனால் இனி வரும் நாட்களிலும் ஜெயிலர் பெரியளவில் வசூலிக்காது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











