காது குத்து விழாவில் ராமராஜன்.. அடடே கெளசல்யாவை பார்த்து எவ்ளோ நாளாச்சு.. செம க்ளிக்ஸ்!

சென்னை: வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் N.சங்கரின் மகன் தரணீஸ்வரனின் காது குத்து நிகழ்ச்சி கோவையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த காதுகுத்து விழாவில் பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று தயாரிப்பாளரின் மகனை வாழ்த்தினர்.

அந்த விழாவுக்கு மக்கள் நாயகன் ராமராஜன் வந்து விழாவை சிறப்பித்த நிலையில், அவருடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை ஜாவா சுந்தரேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Ramarajan and Kousalya attends Producer N Shankar s son ear piercing function clicks goes viral
Photo Credit:

ராமராஜன் வழக்கமாக போடும் கலரில் ஜாவா சுந்தரேசன் உடை அணிந்திருக்க, கருப்பு சட்டையில் கூலர்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு மக்கள் நாயகன் ராமராஜன் செம போஸ் கொடுத்துள்ளார்.

காதுகுத்து விழாவில் ராமராஜன்: தொடர்ந்து ஏகப்பட்ட முகூர்த்த நாட்கள் மாறி மாறி வர சினிமா பிரபலங்கள் காதுகுத்து, வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, திருமணம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகின்றனர். அட்லி மனைவியின் வளைகாப்புக்காக விஜய் மும்பை சென்றார். முன்னதாக மதுரை முத்து மகள்களின் பூப்புனித நீராட்டு விழாவில் பல சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், தற்போது வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் N.சங்கரின் மகன் காது குத்து விழால் ராமராஜன் பங்கேற்றார்.

கெளசல்யா எப்படி இருக்காரு பாருங்க: ராமராஜன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட ஜாவா சுந்தரேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் N.சங்கர் அவர்களின் மகன் தரணீஸ்வரனின் காது குத்து நிகழ்ச்சி கோவையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திரையலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஆடல் பாடல் மேஜிக் ஷோ என பல கலை நிகழ்ச்சிகள் தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தார்.

பையனை வாழ்த்தி விட்டு வரும்போது மக்கள் நாயகன் ராமராஜன் சார் ஹீரோ அசோக் , இயக்குனர் சிவ வெங்கடேசன் சார் & கௌசல்யா மேடத்துடன் ஒரு கிளிக்..." என பதிவிட்டுள்ளார். நடிகை கெளசல்யாவுடன் அவர் எடுத்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கெளசல்யாவை கடைசியா கவின் நடித்த கிஸ் படத்தில் தான் பார்த்தோம். அந்த படத்தில் கூட அவருக்கு ரொம்பவே டல் மேக்கப் தான். இந்த போட்டோவில் ரொம்ப சூப்பரா இருக்காரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X