ஜெயிச்சிட்டீங்க அப்பா.. அம்மா படம் பார்க்கவில்லை.. இருந்தாலும் மகிழ்ச்சி.. ராமராஜன் மகள் ஓபன் டாக்

சென்னை: ராமராஜன் ஒருகாலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். ஆனால் நளினியும், ராமராஜனும் விவாகரத்து செய்து பிரிந்தனர். சூழல் இப்படி இருக்க ராமராஜன் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் ராமராஜனின் மகள் கொடுத்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டில் ராமராஜன் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்தவர். கரகாட்டக்காரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மொத்தமே அவர் பீக்கில் இருந்தது என்றால் ஐந்து வருடங்களுக்குள்தான் இருக்கும். ஆனால் அந்த காலத்தில் அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு கடுமையான போட்டியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramarajan Saamaniyan Nalini

திருமணம் டூ விவாகரத்து: அந்த சமயத்தில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் ஜோசியம்தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நல்லது இல்லை என்று ஜோதிடக்காரர் ஒருவர் சொன்னதாகவும்; அதனாலதான் அவர்களது விவாகரத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

கலவையான விமர்சனம்: படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் ராமராஜனின் மகள் அருணா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அப்பா நடித்த சாமானியன் படத்தை பார்த்தேன். ரொம்ப எமோஷனலாகவும், பெருமையாகவும் இருக்கிறது. சமூக கருத்துள்ள படத்தை கொடுத்திருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து நடித்தாலும் ஒரு தரமான படத்தில் நடித்திருக்கிறார். தான் யார் என்பதையும் நிரூபித்துவிட்டார்.

அப்பாவை மறக்கவில்லை: தியேட்டருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள். அப்பாவை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அதே பாசத்தோடுதான் மக்கள் இருக்கிறார்கள். நான் படத்தை பார்த்துவிட்டு போஸ்டருக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அப்பாவுக்கு அனுப்பி, 'நீங்க ஜெயிச்சிட்டீங்க அப்பா. ஆல் தி பெஸ்ட்' என்று சொன்னேன். அப்போது அவரது குரலில் சந்தோஷம் தெரிந்தது. இனிமேல் அவருக்கு வெற்றி பயணம்தான். என்னுடைய தம்பி அருண் வெளிநாட்டில் இருக்கிறான். அங்கு படம் ரிலீஸாகவில்லை. இதனால் அவன் படம் பார்க்கவில்லை.

அம்மாவும் பார்க்கவில்லை: அம்மாவும் படம் பார்க்கவில்லை. அவர் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். படம் ஹிட் ஆனதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். படத்தின்போது எடுத்த வீடியோக்களை எல்லாம் பார்த்துவிட்டு அம்மா உற்சாகமாகிவிட்டார். அவர் (ராமராஜன்) நிறைய படங்கள் செய்து பழைய மாதிரி வர வேண்டும் என்று அம்மா கூறினார். முக்கியமாக, அப்பாவுக்கு இந்த ஜானரில் நடிப்பது புதிது. இப்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாறிவிட்டார். இந்த மாதிரி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அப்பா நடிக்க வேண்டும். அவர் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. இப்போது எதை ஓபன் செய்தாலும் அவருடைய முகம்தான் தெரிகிறது. எல்லா டிவியிலும் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X