அந்த ஒரே ஒரு படத்துல தான் ரஜினிகாந்தை மிஞ்சினேன்.. ஓபனா சொன்ன ராமராஜன்.. எந்த படம் தெரியுமா?

சென்னை: ராமராஜன் படத்தின் வசூல் ரஜினிகாந்தின் வசூலை விட முந்தியதாக சமீபத்தில் கே.எஸ். ரவிக்குமார் சாமானியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்களே கே.எஸ். ரவிக்குமாரை ரவுண்டு கட்ட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இன்னமும் ஓடி வருகின்றன. ஆனால், நான் ஒரே ஒரு முறை மட்டுமே ரஜினிகாந்தை வசூலில் முந்தினேன் என வெளிப்படையாக ராமராஜன் தனது புதிய பேட்டியில் பேசியுள்ளார்.

Ramarajan opens up which film he earns more than Rajinikanth

மேலும், தனக்கு சூப்பர் ஸ்டாரை ரொம்பவே பிடிக்கும். அவர் நடிக்கும் படங்களை எல்லாம் தியேட்டருக்கு சென்று பார்த்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

ஆர்ஜே பாலாஜிக்கு நோ சொல்லிட்டேன்: எல்கேஜி படத்தில் ஜே.கே. ரித்திஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஆர்ஜே பாலாஜி என்னை தான் அணுகினார். அந்த படத்தில் இடைவேளைக்குப் பிறகு தான் என்னோட ரோலே வருகிறது. அதெல்லாம் பார்த்தால் ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள். அவ்வளவு லேட்டா எல்லாம் வரமாட்டேன். வேண்டாம் என சொல்லி விட்டேன் என எல்கேஜி படத்தை தவிர்த்த கதையை ராமராஜன் கூறியுள்ளார்.

நல்லவேளை வெங்கட் பிரபு படத்துல நடிக்கல: கங்கை அமரன் படங்களான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் என பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகராக மாறிய ராமராஜனை கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார். முதலில் கதையை கேட்டு விட்டு இலங்கையில் சூட்டிங் என்று சொன்னதும், அரசியலில் இருக்கிறேன். அங்கே எல்லாம் சூட்டிங் என்றால் வேண்டாம் என சொல்லி விட்டேன். அதன் பின்னர் பார்ட்டி என தலைப்பு வைத்து பாட்டிலுடன் போஸ்டர் வருகிறது. நல்லவேளை இறைவன் நம்மள காப்பாத்திட்டான் என நினைத்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

ஒருமுறைதான் ரஜினியை முந்தினேன்: சினிமாவில் நான் பீக்ல இருந்தது ஒரு நாலு வருஷம் மட்டும் தான். 1989ம் ஆண்டு அன்புக் கட்டளை, தங்கமான ராசா என இரு படங்கள் வெளியாகின. அதே நேரம் ரஜினிகாந்தின் மாப்பிள்ளை படம் வெளியானது. தங்கமான ராசா படம் 1 லட்சத்து 25 ஆயிரம் ஷேர் ரஜினி சாரோட மாப்பிள்ளை படம் 1 லட்சம் ஷேர் அந்த ஒரு இடத்துல தான் அவரை முந்தினேன். மத்த படி நான் பிந்திட்டேன். அவர் இன்னமும் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் என ராமராஜன் உண்மையை உடைத்து பேசியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் படங்களை பார்ப்பேன்: ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் அனைத்து புதிய படங்களையும் பார்ப்பேன். ஒரு டெக்னீஷியனா அவர் இன்னமும் இப்படி பிசினஸ் பண்றதை பார்க்குறதுக்கே ஆச்சர்யமா இருக்கும். அவருடைய ஸ்டைல், நடிப்பு என எல்லாமே பிடிக்கும் என ராமராஜன் பேட்டியில் கூறியுள்ளார்.

சாமானியன் வருது: இயக்குநர் ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. அந்த படத்துக்கான புரமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ள ராமராஜன் தொடர்ந்து சினிமா விழாக்களில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பது என கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X