மீண்டும் அடர்த்தியான மேக்கப்புடன் ராமராஜன் நடிக்கும் 'கும்பாபிஷேகம்'!

By Shankar

கண்களைப் பறிக்கும் வண்ண உடைகள், அதற்கு மேட்சாக உதட்டுச் சாயம், எந்த பாவமென்று எளிதில் கண்டுபிடிக்க முடியாத முகம்... என அன்று பார்த்த அதே ராமராஜன், வயசானாலும் பரவாயில்லை... ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடத்துடன் மீண்டும் வந்திருக்கிறார்.

ராமராஜன்

ராமராஜன்

ராமராஜனின் திரையுலக சாதனைகளை யாரும் மறந்துவிட முடியாது. கோடம்பாக்க பாக்ஸ் ஆபீசில் வசூல் நாயகனாகத் திகழ்ந்தவர்... அதனால் திரையில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் மக்கள் நாயகன். ராமராஜனின் கூட்டத்துக்கு இன்றைய முதல்வர் ஜெயலலிதாவே வந்திருக்கிறார், அன்றைய நாட்களில்!

பின்னடைவு

பின்னடைவு

அரசியல் ரீதியாக ராமராஜன் எடுத்த முடிவுகள் அவரை திரையுலகிலிருந்தே காணாமல் அடித்துவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து தான் இருப்பதை காட்டி வருவது ராமராஜன் வழக்கம்.

சீறிவரும் காளை - மேதை

சீறிவரும் காளை - மேதை

2001-ல் ராமராஜன் இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார் ராமராஜன். அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து அவரது மேதை என்ற படம் வெளியானது. நீண்ட நாட்கள் கிடப்பிலிருந்த படம்.

கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..

இடையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக போனவர், விபத்தில் அடிபட்டு, சிகிச்சைப் பெற்று இப்போது நடமாட ஆரம்பித்துள்ளார். அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்துக்கு கும்பாபிஷேகம் என தலைப்பிடப்பட்டுள்ளது.

நூர்யா

நூர்யா

ராமராஜன் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நூர்யா என்ற புதுமுகம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சௌந்தர்யன்

சௌந்தர்யன்

சௌந்தர்யன் இசையமைக்க, ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கேஎம் புஷ்பராஜ் என்பவர் எழுதி இயக்குகிறார்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரியில்...

முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதை. கிருஷ்ணகிரி, தர்மபுரி, காவேரிபட்டினம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 9 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X