twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வருஷ பொங்கல் ரேஸில் ராமராஜனும் ஆஜர்!!

    By Shankar
    |

    ரொம்ப நாளைக்குப் பிறகு ராமராஜன் நடித்த படம் வெளியாகிறது. அதுவும் பொங்கலுக்கு!

    நீண்ட காலமாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் மேதை படம்தான் அது. ஒரு காலத்தில் ரஜினி - கமலை விட அதிக சம்பளம் வாங்கியவர் ராமராஜன். குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியான அவரது கரகாட்டக்காரன் படம் செய்த வசூல் சாதனை மகத்தானது.

    அவர் படங்கள் மிக எளிமையானவை. நகைச்சுவையும் இனிய இசையும்தான் அவர் படங்களில் உண்மையான ஹீரோக்கள்.

    அவரது கடைசி படங்கள் பல இளையராஜா, கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாமல் வந்து தோற்றன. அரசியலில் தோல்வி, மனைவியுடன் பிரிவு என தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்தித்த அவர் ஒரு கட்டத்தில் கோடம்பாக்கத்திலிருந்தே காணாமல் போய்விட்டார்.

    சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நடந்த விபத்தில பலத்த காயமடைந்து ஓய்வெடுத்து வந்தார் ராமராஜன். இந்த நிலையில், தான் ரொம்ப நாளைக்கு முன் ஆரம்பித்த மேதை படத்தை இந்த பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டுள்ளார்.

    தை முதல் தேதியன்று (ஜனவரி 15) தமிழகம் முழுவதும் இந்தப் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

    English summary
    Ramarajan's Medhai to be released on January 15, the pongal day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X