ராமராஜனா?.. ஹிப் ஹாப் ஆதியா?.. இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யாரு?.. எந்த படம் தேறியது?

சென்னை: நடிகர் ராமராஜன் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடித்துள்ள நிலையில் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டருக்கு படையெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நடித்த சாமானியன் திரைப்படத்தை முதல் நாள் கூட தியேட்டருக்கு சென்று பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை என்பது வசூல் மூலமாக தெளிவாக தெரிகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பின் நேற்று வெளியான பிடி சார் திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை என்றாலும் ராமராஜன் வெளியான சாமானியன் படத்தை விட அதிக வசூலை முதல் நாளில் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ramarajan s Saamaniyan or Hip Hop Aadhi s PT Sir which will earn more in this week Box Office

இந்த வாரம் வெளியான இரண்டு படங்களும் எந்த அளவுக்கு வசூல் இருக்கிறது என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க.

ராமராஜனின் 'சாமானியன்': ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சாமானியன் திரைப்படம் வீடு கட்ட லோன் வாங்கினால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது. ஆனால், அந்த படத்தில் எந்த ஒரு சரியான தரவும், சுவாரஸ்யமான காட்சி அமைப்பும் இல்லாத நிலையில் ராமராஜன் படத்தை மக்கள் விரும்பவில்லை.

சாமானியன் 2 நாள் வசூல்: வியாழக்கிழமை வெளியான ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் முதல் நாள் 25 லட்சம் வசூல் செய்த நிலையில் இரண்டாம் நாள் வெறும் 20 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உடன் சேர்த்தாலும் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வசூல் கூட வருமா என்பது சந்தேகம் தான் என கூறுகின்றனர். 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிடி சார் முதல் நாள் வசூல்: ஹிப்ஹாப் ஆதி, காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பட்டிமன்ற ராஜா, இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான பிடி சார் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசரி கணேஷ் தயாரிப்பில் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ஒரு கோடி வசூலைக் கூட முதல் நாளில் எட்டாத நிலையில், முதல் வாரத்தில் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் பட்ஜெட் அளவுக்கு வசூல் செய்யுமா? என்பது சந்தேகம் தான் என கூறுகின்றனர்.

கலவையான விமர்சனங்கள்: ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ள நிலையில், படம் 10 கோடி கூட லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் அள்ளுமா என்பது சந்தேகம் தான். கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் படம் அளவுக்கு கூட இந்த படம் இல்லை என்றும் முதல் பாதி செம போர் என்றும் இரண்டாம் பாதி பரவாயில்லை என்கிற விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த படம் தியேட்டரில் எப்படி ஓடுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X