Ilayaraja: இன்னாள் எம்.பி .இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. முன்னாள் எம்.பி. ராமராஜன் வாழ்த்துறேன்!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தனது 80வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இசையுலகில் மிகப்பெரிய ராஜாங்கத்தையே நடத்தி 50 ஆண்டுகளாக தனது இசையால் ஒட்டுமொத்த இசைப்பிரியர்களையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் இளையராஜா.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்தி உள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Ramarajan says Ex MP wishes Current MP Ilayaraja in his latest speech

இளையராஜாவை வாழ்த்திய ராமராஜன்: இளையராஜா இசை தான் ராமராஜன் யார் என்றே ரசிகர்களுக்கு தெரிய வைத்தது. எனக்கு அவர் கொடுத்த பாடல்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்த பாடல்கள் எப்படி ஒரு மனிதரால் இத்தனை ஹிட் பாடல்களை கொடுக்க முடியும் என்றே தெரியவில்லை.

அதனால் தான், அவரை எல்லோருமே இசைஞானி என அழைக்கின்றோம். என் படங்களில் அவரது பாடல்கள் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும் என நான் சொல்லுவேன். அதே போலத்தான் அவர் இசையமைத்த படங்களில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும் சொல்வார்கள் என கலகலப்பாக பேசிய நடிகர் ராமராஜன் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இன்னாள் எம்பிக்கு முன்னாள் எம்பி வாழ்த்து: ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் சாமனியன் படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார். கரகாட்டக்காரன் உள்ளிட்ட அனைத்து படங்களின் பாடல்களுமே பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் அடித்தது.

இன்னாள் எம்பி இளையாராஜாவுக்கு முன்னாள் எம்பி ராமராஜன் பிறந்தநாள் வாழ்த்து சொல்றேன் என சிரித்துக் கொண்டே ராமராஜன் பேசிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும்: இளையராஜாவின் இசை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த உலகில் நீடித்து இருக்கும். இந்த கால ரசிகர்கள் அந்த கால ரசிகர்கள் எல்லாம் ஒன்றுமில்லை. அப்பாவை இப்பவும் அப்பான்னு தான் சொல்றோம்.. அம்மாவை இப்பவும் அம்மான்னு தான் அழைக்கிறோம் அப்படித்தான் இளையராஜாவும் எந்த தலைமுறையினர் ஆனாலும், அவரது இசையை கேட்டால் பிரம்மிக்கத்தான் செய்வார்கள் என பேசி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ராமராஜன்.

ராமராஜன் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் இசை ரசிகர்கள் பலரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X