சாமானியன் படத்துக்கு சரியான விளம்பரம் இல்ல.. தயாரிப்பாளர் அப்படி செய்துவிட்டார்.. ராமராஜன் வேதனை!

சென்னை: நடிகர் ராமராஜன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் சாமானியன். இப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றநிலையில், தயாரிப்பாளர் படத்திற்கு சரியாக விளம்பரப்படுத்தவில்லை, விளம்பரம் சரியாக செய்திருந்தால் சாமானியன் நிச்சயம் வெற்றிப்படமாக அமைந்து இருக்கும் என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

ராகேஷ் இயக்கத்தில் உருவான சாமானியன் படத்தில், ராமராஜன் , ராதா ரவி , மைம் கோபி , எம்.எஸ் பாஸ்கர், வெங்கட், கே.எஸ் ரவிகுமார் , அறந்தாங்கி நிஷா , தீபா ஷங்கர் , சரவணன் சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து கதைகளில் நடித்து எளிய மக்களின் மனதில் இடம்பிடித்த ராமராஜன் சாமானியன் படத்திலும் அப்படியான கதை நாயகனாக நடித்துள்ளார். விவசாயப் பின்னணியைக் கொண்ட எளிய மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி பெறும் அவலங்களை பேசும் படமாக இருந்தது சாமானியன்

Saamaniyan Ramarajan interview

ரூ 50 டிக்கெட்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் TPV மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் 25 வது நாளாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ராமராஜன் திரையரங்கிற்கு வந்திருந்தார். அப்போது பேசிய அவர், மக்கள் திரையரங்கிற்கு வருவதே கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில், என் படத்தை பார்க்க பெண்கள் தியேட்டருக்கு வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் டிக்கெட் கட்டணம் அதிக அளவில் இருப்பதால், ஏழை எளிய சாமானிய மக்கள் திரையரங்குகளுக்கு வரமுடியாமல் போய்விடுகிறது. இதனால், நாளையில் இருந்து ஆலங்குளம் TPV திரையரங்கில் 50 ரூ மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்றார்.

விளம்பரம் செய்யவில்லை: தொடர்ந்து பேசிய அவர், சாமானியன் படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யவில்லை, ரொம்ப பேருக்கு படம் எங்கே ஓடுதுனே தெரியாமல் போய்விட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு நிகழ்ச்சியில் ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெத்னு பேசி இருக்கிறார். இயக்குநர் அவர் பங்கிற்கு தனது வேலையை செய்து முடித்தார், நான், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் எல்லா நடிகர்களும் சேர்ந்து படத்தின் ஆப்ரேஷனை சரியாக செய்து முடித்து, வெளியே ஒரு குழந்தையை அனுப்பிவிட்டோம். ஆனால், வெளியே வந்த குழந்தையை தயாரிப்பாளர் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்.

வருத்தப்பட்ட ராமராஜன்: தொலைக்காட்சியில் விளம்பரம் இல்லை, பேப்பரில் விளம்பரம் இல்லை சாமானியன் படத்திற்கு இதுவரை எந்த விளம்பரமும் இல்லை. அப்படி இருந்தால் எப்படி படம் ஓடும். இன்னைக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் ராமராஜன் தியேட்டருக்கு வருகிறது என்றால் அது மக்களுக்கு எப்படி தெரியும். இதற்காக அவர் வாங்கிய பணத்தை என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X