விஜய் அப்போவே அந்த ஆட்டம் போடுவாரு.. அதுதான் வேலையே.. மெமரிஸை பகிர்ந்த ராமராஜன்

சென்னை: ராமராஜன் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கிராமத்து பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ஹீரோவாக மட்டுமே நடித்த ஒரே ஒரு கதாநாயகன் என்றால் அது ராமராஜன் மட்டும்தான். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிறகு ஆளே காணாமல் போன அவர் இப்போது சாமானியன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் விஜய் குறித்து அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக கோலோச்சியிருந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் ராமராஜன். உயரம் கம்மியான உருவம், சினிமாவுக்குரிய இலக்கணம் இல்லாத உடல்வாகு என முத்திரை குத்தப்பட்டாலும் தனது திறமையால் முன்னேறியவர் ராமராஜன். கிராமத்து பக்கம் அவருக்கென்று ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக நமது வீட்டில் இருக்கும் ஒருவர் போல் அவர் இருந்ததால் ரசிகர்கள் அவரை எளிதாக ஏற்றுக்கொண்டனர்.

Ramarajan Shares his Old Memories About Actor Vijay

கரகாட்டக்காரன்: ராமராஜனின் திரை வாழ்க்கையையே புரட்டிப்போட்ட படம் என்றால் கரகாட்டக்காரன். தில்லானா மோகனாம்பாள் படத்தின் கிராமத்து வெர்ஷனாக உருவாகியிருந்த அந்தப் படத்தை கங்கை அமரன் இயக்கியிருந்தார். 1989ஆம் ஆண்டு வெளியான அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பக்கா கிராமத்து வாசனையோடு படம் உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அப்படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடியது.அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை ஊர் திருவிழாக்களிலும் பலரது செல்ஃபோன்களிலும் ஒலித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமலுக்கு இணையாக: கரகாட்டக்காரன் வெற்றிக்கு பிறகு அவரது கிராஃப் உச்சத்துக்கு சென்றது. ரஜினி,கமலுக்கு இணையாக அவருக்கும் ரசிகர்கள் சேர்ந்தனர். கரகாட்டக்காரனுக்கு பின்பு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்தன. இந்தச் சூழலில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. நிலைமை இப்படி இருக்க சினிமாவிலிருந்து ஒதுங்கிய ராமராஜன் அரசியலில் கவனத்தை திருப்பினார். ஆனால் அதிலிருந்தும் ஒருகட்டத்துக்கு மேல் ஒதுங்கினார்.

சாமானியன்: தமிழ் சினிமாவில் சோலோ ஹீரோவாக மட்டுமே அதிக படங்கள் நடித்தவர் என்ற பெருமை ராமராஜனுக்கு மட்டும்தான் உண்டு. அவர் பல வருடஙக்ளுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்கள் திரையில் தனது முகத்தை காண்பிக்காமல் இருந்த ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகேஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தையும் ஈர்த்துள்ளது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

ராமராஜன் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஒருகாலத்தில் விஜய்யின் பக்கத்து வீட்டில்தான் நான் வசித்துவந்தேன். அப்போதெல்லாம் விஜய்யின் வீட்டில் இருந்து ஒரே சத்தமாக இருக்கும். என்ன சத்தம் என்று அவரது தாய் ஷோபாவிடம் கேட்பேன். அதற்கு அவர், விஜய் பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதாக சொல்வார். அவர் தனது சிறு வயதில் நடனம் ஆடுவதையே வழக்கமாக வைத்திருந்தார். விஜய் இந்த அளவுக்கு வளர்ந்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. அரசியலில் அவர் இறங்கியதற்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X