அடக்கடவுளே.. எம்ஜிஆரை தொட முயற்சி செய்து அடி வாங்கியிருக்கேன்.. ராமராஜன் சொன்ன பகீர் தகவல்!
சென்னை: புரட்சி தலைவர், மக்கள் திலகம் என மக்களால் கொண்டாடப்பட்ட எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன் சினிமாவில் அவரை போலவே வர வேண்டும் என்றும் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சினிமா மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற கொள்கையுடன் இன்று வரை தனது படங்களை கொடுத்து வருகிறார்.
கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் சிலுக்கு சட்டை, லிப்ஸ்டிக், ரோஸ் பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு பிரமாதப்படுத்தியிருப்பார். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வெறும் டவுசர் மட்டும் அணிந்துக் கொண்டு மேல் சட்டை கூட போடாமல் நடித்தும் படத்தை வெள்ளி விழா காண வைத்தார்.

எம்ஜிஆரை எப்படியாவது தொட்டுப் பார்த்து விட வேண்டும் என நினைத்து ராமராஜன் அடி வாங்கியது குறித்து தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.
துணி படத்தின் காப்பி இல்லை: ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் படத்தின் டிரெய்லரை பார்த்த பலரும் இந்த படமும் துணிவு படத்தின் கதை போலவே இருக்கே என்றும் அஜித் படத்தை பார்த்து காப்பி அடித்து விட்டாரா ராமராஜன் என சொல்றாங்க. ஆனால், நாங்க சாமானியன் படத்தின் ஷூட்டிங் ராஹேஜா டவர்ஸில் எடுக்கும் போது, நடிகர் அஜித்தின் துணிவு படமும் அங்கே தான் எடுத்தாங்க. துணிவு படத்தின் கதை கூட அப்போது எங்களுக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார் ராமராஜன்.
சிகரெட், சரக்குக்கு நோ: அரசியல் கட்சியை ஆரம்பித்த பின்னரும் நடிகர் விஜய் தனது கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் பார்ட்டி ஒன்னை தொடங்கட்டுமா ஷாம்பைனை தொறக்கட்டுமா என சரக்கு பாடலை பாடி வருகிறார். ஆனால், 500 கோடி ரூபாய் கொடுத்தாலும், சிகரெட் மற்றும் சரக்கு அடிப்பது போன்ற காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்பதில் ராமராஜன் உறுதியாக இருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
எம்ஜிஆரை தொடப் போய் அடி வாங்கினேன்: சின்ன வயசுல மேலூருக்கு தலைவர் வருவாரு. அவரை பார்க்க முதல் வரிசையில் போய் உட்கார மாட்டேன். அப்படி உட்கார்ந்த அவரை பார்க்கத்தான் முடியும். தொட முடியாது. அவர் வருவார்ல அந்த வழியில காத்துக் கிடப்பேன். ஒரு முறை அவரை தொடப் போய் போலீஸாரிடம் அடியெல்லாம் வாங்கியிருக்கேன். அதன் பின்னர் எம்ஜிஆர் என்னை எப்படி பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க என எம்ஜிஆருடன் எடுத்த போட்டோவை காட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார் ராமராஜன்.


Click it and Unblock the Notifications











